அங்கோரா ஆடு
அங்கோரா ஆடு (Angora goat) என்பது ஒரு ஆட்டு இனமாகும். இந்த ஆட்டிலிருந்து கிடைக்கும் மிருதுவான ரோமமானது உலகப் புகழ்பெற்ற மொகேர் என்னும் துணி நெய்ய அவசியமானதாக உள்ளது.
வரலாறு[தொகு]
இந்த ஆடானது நடு ஆசியாவின் மார்க்கோர் காட்டு ஆட்டின் வம்சாவழியினதாக கருதப்படுகிறது.[1][2] இவை இப்பகுதியில் பல்லோலிதிக்கு அருகே இருந்து வந்தவையாகும்.[3] 1938-1952 ஆம் ஆண்டுகளில் வெளியான துருக்கிய லிரா பணத் தாள்களில் ஆங்கொரா வெள்ளாட்டுகள் சித்தரிக்கப்பட்டன.[4]
விளக்கம்[தொகு]
அங்கோரா ஆட்டின் கொம்பானது செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். இதன் மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாக உடலில் தொங்கும். இதன் மயிரானது ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். சாதாரணமாக ஓர் ஆட்டில் இருந்து 2 1/2 ராத்தல் மயிர் கிடைக்கும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் கம்பளி ஆடைகளானது காசுமீர ஆடைகள் பாேல் மிக உயர்ந்தவை. இந்த ஆடுகளை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள்.[5] =
மேற்கோள்கள்[தொகு]
- ↑ John Lord Hayes (1868). The Angora goat: its origin, culture and products. Boston, 1868
- ↑ Olive Schreiner (1898). Angora goat ... : and, A paper on the ostrich ... London : Longmans, 1898
- ↑ Carol Ekarius (10 September 2008). Storey's Illustrated Breed Guide to Sheep, Goats, Cattle, and Pigs: 163 Breeds from Common to Rare. Storey Publishing. பக். 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60342-037-2.
- ↑ Central Bank of the Republic of Turkey பரணிடப்பட்டது 2009-06-03 at WebCite. Banknote Museum:
2. Emission Group – Fifty Turkish Lira – I. Series பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்;
3. Emission Group – Fifty Turkish Lira – I. Series பரணிடப்பட்டது 2008-12-25 at the வந்தவழி இயந்திரம் & II. Series . – Retrieved on 20 April 2009. - ↑ "அங்கோரா ஆடு". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 24. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.