உள்ளடக்கத்துக்குச் செல்

தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WCSP இணையதளப் பக்கம்}

தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி (World Checklist of Selected Plant Families=WCSP) என்பது என்பது பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். இத்திட்டமானது தாவரவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பன்னாட்டு தாவர வகைப்பாட்டியல் படி பெயரிடப்பட்ட தாவரக் குடும்பங்களின், பேரினங்களின், இனங்களின் பெயர்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ, அமைப்பினரால் உலகின் தாவரப்பெயர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்படுகின்றன. இத்தாவரப் பெயர்களை இணையத்தில் தேடும் வகையிலும், சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கிக் கொள்ளும் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.[1]1990ஆம் ஆண்டில் அரச கழக தாவரவியல் பூங்கா, கியூச் சார்ந்த ஆராய்ச்சியாளர் இராபல் கோவர்ட்சு(Rafaël Govaerts) 'கியூர்கசு' (Quercus) பேரினத்திற்காக, ஒரு சரிபார்ப்பு பட்டியலை உருவாக்கினார். தாவரவியல் ஆய்வறிஞர்களால் ஏற்றக்கொள்ளப்பட்ட அப்பட்டியல் முறைமை, 1999 ஆம் ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கிய திட்டத்தால்(Global Strategy for Plant Conservation (GSPC)), பிற பேரினங்களுக்கும் பின்னர் விரிவு படுத்தப்பட்டன. 2013| ஆம் ஆண்டு சனவரி கணக்கின் படி, 173 வித்துத் தாவரங்கள் அடங்கிய குடும்பங்கள் கணக்கிடப் பட்டிருந்தன. ஒருவித்திலைத் தாவரங்களின் குடும்பங்கள் முழுமையாக இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.[2] பிற தாவரங்கள் இணைக்கப்பட்டன. கியூ ஆராய்ச்சிகம் மேலும் பல உலக தாவரவியல் திட்டங்களோடு இணைந்தும் செயற்பட்டது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இத்திட்ட இணையதளமும்(WCSP), அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ (WCVP[3]) இணையதளமும் தொடர்ந்து செயற்பாட்டை நிறுத்தின. இவற்றின் தரவுகள் முழுமையாக உலகத்தாவரங்களின் இணையம் திட்டத்திற்கு(Plants of the World Online (POWO)) தரவகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. [4]

இதனையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WCSP and WCVP closing". Plants of the World Online. The Royal Botanic Gardens Kew. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.
  2. https://powo.science.kew.org/
  3. https://www.gbif.org/dataset/f382f0ce-323a-4091-bb9f-add557f3a9a2
  4. "The history". Plants of the World Online. powo-science-kew. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.

வெளியிணைப்புகள்

[தொகு]