உள்ளடக்கத்துக்குச் செல்

உலக தாவரவள இணைநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக தாவரவள இணைநிலை
வலைத்தள வகைகலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உருவாக்கியவர்அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ,
மிசோரி தாவரவியல் பூங்கா
வெளியீடுஅக்டோபர் 2012
தற்போதைய நிலைசெயற்படுகிறது
உரலிabout.worldfloraonline.org


உலக தாவரவள இணைநிலை (World Flora Online (WFO)) என்பது இணையம் சார்ந்து, உலகத்தாவரத் தரவுகளை, உலக மாந்தர் அனைவருக்கும் தரும் இணையதளம் ஆகும். இத்தளம் திறந்த அணுகல் உள்ள இத்தரவுதளமானது, 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயற்படத் தொடங்கியது.

பின்புலங்கள்[தொகு]

இத்தளத்தினை தொடங்குவதற்கு முன், 2010 ஆம் ஆண்டு கியூ தாவரவியல் அமைப்பு, மிசோரி தாவரவியல் பூங்காவுன் இணைந்து, தாவரப்பட்டியல் (The Plant List) என்ற இணையதளத்தினைத் தொடங்கியது. அதன் வேறுபட்ட, மேம்பட்ட வடிவமாக, இந்த உலக தாவரவள இணைநிலை இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் உலக தாவர வள ஆவணங்களை (Flora (publication)) கொண்டு செயற்படத் திட்டமிட்டது.[1]

2020 ஆம் ஆண்டை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்ட இத்திட்டமானது, ஐக்கிய நாடுகளின் பல்லுயிரியல்பு கருத்தரங்கு (United Nations Convention on Biological Diversity) திட்ட அறிக்கைகளை இலக்காகக் கொண்டதாகும். இதன்படி, திரட்டப்படும் தரவுகளால், உலகில் தாவரங்களின் அழிந்து வரும் தன்மை, உயிரின வளங்களை ஆய்ந்தறிய வழிவகுத்தது. இந்த ஆய்வுகளானது, பன்னாட்டு உயிரின ஆய்வு அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புகளினால் விளைந்தது[2] எனலாம். இவ்வமைப்புகள் இறுதியாக தாவர வளங்காப்புக்கான பன்னாட்டு உத்தி (Global Strategy for Plant Conservation) (GSPC) என்பதனை அறிவித்தது. அந்த அறிவிப்பு யாதெனில், “இணைய இணைப்பின் வழியே தெரிந்த தாவரவளங்களை அமைத்தல்” என்பதாகும்.

இதையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

துணைநூல்கள்[தொகு]

  • Miller, Chuck; Ulate, William (23 August 2017). "World Flora Online Project: An online flora of all known plants". Proceedings of TDWG 1: e20529. doi:10.3897/tdwgproceedings.1.20529. 
  • "World Flora Online: An international initiative of the Global Partnership for Plant Conservation". The World Flora Online Consortium. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச்சு 2024.
  • "World Flora Online". Plant Science. மிசோரி தாவரவியல் பூங்கா. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச்சு 2024.
  • "The Plant List". அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ; மிசோரி தாவரவியல் பூங்கா. 2013. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச்சு 2024., மேலும் காண்க உலகத் தாவரப்பட்டியல் (குறிப்பு:[உலகத் தாவரப்பட்டியல் (The Plant List) என்பது தற்போது powo தளத்தோடு இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது?.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தாவரவள_இணைநிலை&oldid=3904718" இலிருந்து மீள்விக்கப்பட்டது