பனை இல்லம், கியூ தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனை இல்லம்
உட்பக்க மேல்நடைபாதை

பனை இல்லம், கியூ தோட்டம் (Palm House, Kew Gardens) என்பது இலண்டனில் உள்ள கியூ மாவட்டத்திலுள்ளள [[அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ|அரச கழக தாவரவியல் பூங்காவில் அமைந்திருக்கும் பெரிய பனை இல்லம் ஆகும், இதனுள் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல பனை, பனை தொடர்புடைய தாவரங்களை வளர்க்கும் ஆய்வு திறனுக்கு, பன்னாட்டு ஆய்வாளர்களிடம் பெயர் பெற்று திகழ்கிறது. இந்த இல்லம், 1848 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் பேணப்படும், பல தாவரங்கள் காடுகளில் அழிந்தும், அழிநிலையிலும் இருக்கின்றன. பல மரங்களின் மேலுள்ளதை காணும் வகையில், மேல் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை, பார்வையாளர்கள் பெரிய தாவரங்களின் கிளைகளுக்குள் செல்லும்படியுள்ளது. கியூவில் இன்னும் பெரிய " மிதவெப்ப வீடு" உள்ளது. இங்கு பல தாவரயினங்கள், குறைந்த வெப்பநிலையில் பேணப்படுகின்றன.

சிறப்பு தாவரம்[தொகு]

உலகின் மிகப் பழமையான பானை தாவரயினம் (cycad plant; Encephalartos altensteinii) இங்கு பேணப்படுகிறது. இது 1848 ஆம் ஆண்டு இப்பனை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் எடை 1000 கிலோவினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகின் பழமையான பானை செடியை சந்திக்கவும் | கியூ". www.kew.org. பார்க்கப்பட்ட நாள் 2022-04 -24. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனை_இல்லம்,_கியூ_தோட்டம்&oldid=3904710" இலிருந்து மீள்விக்கப்பட்டது