தாமரகுளம்
தாமரகுளம்
தாமரக்குளம் | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 8°53′01″N 76°35′11″E / 8.883566°N 76.586412°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் நகராட்சி ஆணையம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691001 |
வாகனப் பதிவு | கே.எல்-02 |
மக்களவை (இந்தியா) மக்களவைத் தொகுதி | கொல்லம் மக்களவைத் தொகுதி |
குடிமை நிறுவனம் | கொல்லம் நகராட்சி ஆணையம் |
சராசரி கோடைகால வெப்பநிலைAvg. summer temperature | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
தாமரகுளம் (Thamarakulam) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் வணிக மையமும் புறநகர் பகுதியுமாகும். தாமரக்குளம் என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. தாமரகுளம் டவுன்டவுன் கொல்லம் என்ற மத்திய வணிகப்பகுதியின் ஒரு பகுதியான தாமரகுளம் சின்னக்கடை என்ற நகரத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது. [1]
கோவில்
[தொகு]தாமரகுளத்தில் உள்ள கணபதி கோவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான இந்து கோவில் மற்றும் வழிபாட்டு மையமாகும். கொல்லம் பூரம் கொண்டாட்டத்தின் போது இக்கோயிலில் உள்ள யானைகள் பொதுக் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. தாமரகுளம் கோவிலில் இருந்து யானைகளின் எழுநெல்லிப்பு என்பது கொல்லம் பூரத்தின் வழக்கமான சடங்காகும், இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் காணப்படுகிறது.
உள்ளூர் நிர்வாகம்
[தொகு]கொல்லம் மேம்பாட்டு ஆணைய அலுவலகம் தாமரகுளத்தில் உள்ளது.
பார்ட்னர் கேரளா சந்திப்பு 2014
[தொகு]கேரள அரசு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்ட்னர் கேரளா என்ற பெயரில் நகர்ப்புற மேம்பாட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்தது [2]
கொல்லம் நகராட்சி ஆணையம் மற்றும் கொல்லம் மேம்பாட்டு ஆணையம் இரண்டும் தாமரைக்குளத்திற்கான பல முன்மொழிவுகளை பார்ட்னர் கேரளா சந்திப்பின் போது [3] சமர்ப்பித்தன. இவை ::
- தாமரகுளத்தில் மொத்தம் ரூ.178.53 கோடியில் வணிக வளாகம் மற்றும் மாநாட்டு மையம் மற்றும் பலநிலை கார் நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை கொல்லம் நகராட்சி ஆணையம் வெளியிட்டது.
- கொல்லம் மேம்பாட்டு ஆணையம் தாமரக்குளத்தில் 80 கோடி ரூபாய் செலவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வணிக வளாகம், அலுவலக வளாகம், கண்காட்சி மற்றும் வர்த்தக மையம் ஆகியவற்றை நிறுவ முன்மொழிந்தது. [4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] Post and Telecommunication - Kollam District
- ↑ Partner Kerala eyes Rs.2Kcr for 100 projects
- ↑ Projects - Partner Kerala
- ↑ "Partner Kerala: EoIs Worth Over Rs 1,863 Crore Inked". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.