உள்ளடக்கத்துக்குச் செல்

தயா மாஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயா மாஸ்டர்
பிறப்புவேலாயுதம் தயாநிதி
3 மார்ச்சு 1954 (1954-03-03) (அகவை 70)
பருத்தித்துறை, இலங்கை
தேசியம்இலங்கையர்
குடியுரிமைஇலங்கை
பணிஊடகம்
செயற்பாட்டுக்
காலம்
20 ஏப்ரல் 2009
அமைப்பு(கள்)தமிழீழ விடுதலைப் புலிகள்
அறியப்படுவதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டதற்காக

தயா மாஸ்டர் (Daya Master) என பொதுவாக அறியப்படும் வேலாயுதம் தயாநிதி (பிறப்பு 3 மார்ச் 1954) என்பவர் இலங்கையின் முன்னணி தமிழ்ப் போராளி இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினரும், ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்தவரும் ஆவார்.[1]

துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்

[தொகு]

தயாநிதி 1954, மார்ச், 3 அன்று வட இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்தார்.[2][3] இவர் பருத்தித்துறைக்கு அருகில் உள்ள தம்பாசிட்டியை சேர்ந்தவர்.[2][4] இவர் முதலில் ஆங்கில தனிப்பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார். இதனால் தயா மாஸ்டர் என்ற பெயரைப் பெற்றார்.[2][4]

தயா மாஸ்டர் ஆசிரியையை ஒருவரை 1996 இல் திருமணம் செய்து கொண்டார்.[5] இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.[5]

போராளியாக

[தொகு]

1980 களின் பிற்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்திருந்தபோது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி. ஆர். எல். எப்.), என்ற இந்திய ஆதரவு தமிழ் போராளி குழு, தயா மாஸ்டரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததற்காக கைது செய்து சித்திரவதை செய்தது.[4] ஈ.பி. ஆர். எல். எஃப் தளபதி சுகி இவர் மீது கொண்ட பரிதாபத்தால் மட்டுமே தயா மாஸ்டர் உயிர் தப்பினார் என்று கூறப்படுகிறது.[4]

தயா மாஸ்டர் 1990 களின் முற்பகுதியில் புலிகளுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார். 1994 சமாதான முன்னெடுப்பின் போது இவர், புலிகள் சார்பாக, யாழ்ப்பாணக் குடாநாடிற்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த பிரமுகர்களை சந்தித்தார்.[4] பின்னர், கர்னல் சூசையின் உதவியுடன் இவர் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் ஆனார்.[4] 2002-06 போர் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் மக்கள் தொடர்பாளராக இவர் முக்கியத்துவம் பெற்றார்.[6]

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தயா மாஸ்டர் 2006 ஜூலை 13 அன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.[7][8] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாகாண அமைச்சர் ஆனந்த சரத் குமார ரத்நாயக்கவிற்கு சொந்தமான மிட்சுபிஷி மொன்டெரோவில் இராணுவத்தின் துணையுடன் கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.[7][9] பயங்கரவாதத்திற்கு எதிரான சிங்கள பௌத்த தேசியவாதிகள்கள் 2006 சூலை 14 அன்று தயா மாஸ்டரைக் கைது செய்யக் கோரி மருத்துவமனைக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தினர்.[10][11] தயா மாஸ்டர் 2006 சூலை 15 மருத்துவமனையில் விடுவிக்கப்பட்டார்.[12] இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் (எஸ்.எல். எம். எம்) துணையுடன் இவர் கிளிநொச்சிக்குத் திரும்பினார்.[13] மருத்துவமனை கட்டணத்தை எஸ்.எல். எம். எம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.[14] எஸ்.எல். எம். அக்கூற்றை மறுத்தது.[13] விடுதலைப் புலிகளால் உதவி ஆய்வாளர் பந்துஜீவ போப்பிட்டிகொட விடுதலை செய்ததற்கு பதிலாக தயா மாஸ்டரை கொழும்பு செல்ல இலங்கை அரசு அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[4][15] போபிடிகொட 2006 ஆகத்து 26 அன்று புலிகளால் விடுதலை செய்யபட்டார்.[16][17]

தயா மாஸ்டரும் அவரது சகாவான ஜோர்ஜ் மாஸ்டரும் 2009 ஏப்ரல் 20 இல் புதுமாத்தளனில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர், அதாவது ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோல்வியடைவதற்கு முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு.[18] இருவரையும் கைது செய்து கொழும்புக்கு கொண்டு செல்லபட்டனர்.[5] விசாரணைக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தின் 4வது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[5] சிஐடியின் 4வது தளம் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்குப் பெயர் போனது.[19][20] "மறுவாழ்வு" செய்யப்பட்ட பின்னர் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.[5]

போர் முனையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இருநூறு பொதுமக்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதாக தயா மாஸ்டர் கூறினார்.[21] 2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக தயா மாஸ்டரும் கருணா அம்மானும் இலங்கை ராணுவத்தால் புதுமாத்தளனுக்கு வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.[5][22]

தயா மாஸ்டரும் ஜோர்ஜ் மாஸ்டரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சிறை வைக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை.[23][24] பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை என்று சி.ஐ.டி கூறியதை அடுத்து, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு பிரதான நீதவான் நிஷாந்த ஹப்புஆராச்சி அவர்களால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[25] இவர்கள் இருவரும் மாதம் ஒருமுறை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் நேர்நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கபட்டது. ஆனால் இந்த நிபந்தனை 2010 பிப்ரவரியில் தளர்த்தப்பட்டது. அதன் பிறகு இவர்கள் யாழ்ப்பாண சிஐடி அலுவலகத்தில் மட்டுமே நேர் நிற்க வேண்டியிருந்தது.[26]

பிற்கால வாழ்க்கை

[தொகு]

மகிந்த ராசபக்ச அமைச்சரவையில் ஒரு காலத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்குச் சொந்தமாக இயக்கப்படும் வட இலங்கையை தளமாகக் கொண்ட சற்றே அரசு சார்பாக ஒளிபரப்பாகும் டிஷ் ஏசியா நெட்வர்க்கான (டேன் டி.வி) செய்திப் பிரிவில் தயா மாஸ்டர் பணியாற்றத் தொடங்கினார்..[5][27]

2013 ஏப்ரலில் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக தயா மாஸ்டர் அறிவித்தார்.[28] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக தயா மாஸ்டரை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.[29]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Haviland, Charles (15 September 2010). "Sri Lanka war 'a waste of people's lives' – ex-Tiger". BBC News. https://www.bbc.co.uk/news/world-south-asia-11318187. 
  2. 2.0 2.1 2.2 "Daya Master surrenders". The Daily Mirror (Sri Lanka). 21 April 2009 இம் மூலத்தில் இருந்து 3 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703025339/http://archives.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=46786. 
  3. "Daya Master & George Master surrender to army troops". Lanka-e-News/இலங்கை தரைப்படை. 21 April 2009 இம் மூலத்தில் இருந்து 2009-04-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090425112125/http://www.lankaenews.com/English/news.php?id=7515. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Who is this Daya Master?". ஏசியன் டிரிபியூன். 16 July 2006. http://www.asiantribune.com/index.php?q=node/1112. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Subramanian, Nirupama; Radhakrishnan, R. K. (3 November 2012). "Rising from the ruins". Frontline 29 (22). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2922/stories/20121116292200400.htm. 
  6. "Tamil Tigers' changing stripes". http://news.bbc.co.uk/1/hi/programmes/from_our_own_correspondent/2256215.stm. 
  7. 7.0 7.1 "Operation Daya Master at dead of night". 16 July 2006. http://www.nation.lk/2006/07/16/news11.htm. 
  8. "Daya Master at Apollo". 14 July 2006. http://archives.dailymirror.lk/2006/07/14/front/07.asp. 
  9. Dilrukshi Handunnetti (23 July 2006). "Daya Master's vehicle and the ministerial connection". http://www.thesundayleader.lk/archive/20060723/issues.htm. 
  10. "NMAT demands Daya Master's arrest". 15 July 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18808. 
  11. Rutnam (15 July 2006). "NMAT at Apollo: Arrest Daya Master". http://archives.dailymirror.lk/2006/07/15/front/2.asp. 
  12. "Daya Master discharged from hospital in Colombo". 16 July 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18812. 
  13. 13.0 13.1 Bastians (16 July 2006). "Daya Master discharged". http://www.nation.lk/2006/07/16/news2.htm. 
  14. "SLMM in fresh bid to get SI released". 16 July 2006. http://www.sundaytimes.lk/060716/news/np1.1.html. 
  15. Jayasiri (18 July 2006). "NCPA officer re-remanded by LTTE". http://archives.dailymirror.lk/2006/07/18/front/04.asp. 
  16. Singh (27 August 2006). "Bopitigoda freed after ten months". http://www.nation.lk/2006/08/27/news13.htm. 
  17. Gamage (27 August 2006). "LTTE releases policeman". http://www.island.lk/2006/08/27/news15.html. 
  18. "Two key Tamil Tigers 'surrender'". 22 April 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8012016.stm. 
  19. "Sri Lanka: Rape of Tamil Detainees". மனித உரிமைகள் கண்காணிப்பகம். 26 February 2013.
  20. "Sri Lanka's new chapter". 23 May 2009. http://news.bbc.co.uk/1/hi/programmes/from_our_own_correspondent/8064078.stm. 
  21. "Defector says LTTE killed civilians". பிபிசி Sinhala. 29 April 2009. http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090429_daya_master.shtml. 
  22. "Karuna, daya master identify LTTE chief’s body". இந்தியன் எக்சுபிரசு/பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 21 May 2009. http://www.indianexpress.com/news/karuna-daya-master-identify-ltte-chief-s-body/463146/. 
  23. "Bail for LTTE spokesman". The Sunday Times (Sri Lanka). 13 September 2009. http://www.sundaytimes.lk/090913/News/nws_16.html. 
  24. "Two key Tamil Tigers given bail". BBC News. 11 September 2009. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8251587.stm. 
  25. "Daya Master & George Master of LTTE to be tried under normal law". The Sunday Times (Sri Lanka). 11 September 2009. http://www.sundaytimes.lk/cms/article10.php?id=3896. 
  26. "'Remove seals' on Lanka newspaper". பிபிசி Sinhala. 1 February 2010. http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/02/100201_lanka_daya.shtml. 
  27. "Daya Master talks of new life". பிபிசி Sinhala. 15 September 2010. http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/09/100915_dayamaster.shtml. 
  28. "Daya Master to contest on UPFA ticket". The Daily Mirror (Sri Lanka). 24 April 2013. http://www.dailymirror.lk/news/28492-daya-master-to-contest-on-upfa-ticket.html. 
  29. "TNA vs LTTE – The Northern Provincial Council stakes". தி ஐலண்டு (இலங்கை). 1 May 2013. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயா_மாஸ்டர்&oldid=3934451" இலிருந்து மீள்விக்கப்பட்டது