தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இது சென்னையில் அமைந்துள்ள டாக்டர். எம். ஐி.ஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று.

வரலாறு[தொகு]

இந்த மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் அன்றைய இந்தியாவின் ஐனாதிபதி டாக்டர். ராஐேந்திர பிரசாத்தால் 1958 இல் நடப்பட்டது. நிதி மற்றும் கல்லூரி அனுமதி அன்றைய தமிழக முதல்வர் காமராஐால் வழங்கப்பட்டது. அப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரிசுத்தம் நாடார் கல்லூரிக்கான வைப்பு நிதியையும் அளித்து கல்லூரி கட்டுமானத்திற்காக 89 ஏக்கர் நிலத்தை தஞ்சாவூர் ராயல் சங்கம் வழியாக அளித்தார்.

பயனாளிகள்[தொகு]

தஞ்சாவூர், திருவாரூர்; நாகப்பட்டினம், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் மூலமாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.

விரிவாக்கம்[தொகு]

650 படுக்கைகளுடன் 1960 இல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி 300 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மருத்துவ உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக உருவெடுத்தது.

மேற்கோள்[தொகு]