உள்ளடக்கத்துக்குச் செல்

தங்க தொண்டை குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க தொண்டை குக்குறுவான்
தங்க தொண்டை குக்குறுவான் பான்கோலாகா காட்டுயிர் காப்பகத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. பிராங்க்லினி
இருசொற் பெயரீடு
சைலோபோகன் பிராங்க்லினி
(பிளைத், 1842)
வேறு பெயர்கள்

சைனாப்சு ராம்சாயே
மெகாலாமிய பிராங்க்லினி

தங்கத் தொண்டை குக்குறுவான் (Golden-throated barbet)(சைலோபோகன் பிராங்க்லினி) என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஆசியக் குக்குறுவான் சிற்றினம் ஆகும். இது 900 மற்றும் 2,700 m (3,000 மற்றும் 8,900 அடி) வரையிலான உயரத்தில் உள்ள முதன்மையான காடுகளில் வாழ்கிறது. இதன் பரவலான விநியோகம் மற்றும் நிலையான எண்ணிக்கை காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க சிவப்பு பட்டியலில் தீ வாய்ப்பு கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

வகைப்பாட்டியல்

[தொகு]

புக்கோ பிராங்க்லினி என்பது 1842ஆம் ஆண்டில் எட்வர்ட் பிளைத்தால் முன்மொழியப்பட்ட விலங்கியல் பெயர்ஆகும். இவர் டார்ஜிலிங்கில் சேகரிக்கப்பட்ட தங்கத் தொண்டையுடன் கூடிய தெளிவான பச்சை குக்குறுவானை விவரித்தார்.[2] இது 1842ஆம் ஆண்டில் ஜார்ஜ் ராபர்ட் கிரேவால் முன்மொழியப்பட்ட மெகலைமா பேரினத்தில் வைக்கப்பட்டது. இவர் புக்கோவிற்குப் பதிலாக இந்தப் பெயரைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தார்.[3] 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், தங்கத் தொண்டை குக்குறுவான் மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன:[4]

 • 1875ஆம் ஆண்டில் ஆர்தர் விசுகவுண்ட் வால்டனால் முன்மொழியப்பட்ட மெகலேமா ராம்சாய் என்பது கரேன் மலைகளில் சேகரிக்கப்பட்ட தங்கத் தொண்டை குக்குறுவான் ஆகும்.[5]
 • 1919ஆம் ஆண்டில் தெற்கு வியட்நாமில் உள்ள லாங்பியன் பீடபூமியில் சேகரிக்கப்பட்ட குக்குறுவான்கள் ஹெர்பர்ட் சி. ராபின்சன் மற்றும் சி. போடன் க்ளோஸ் ஆகியோரால் முன்மொழியப்பட்ட சயனோப்சு பிராங்க்லினி ஆரிகுலரிசு [6]
 • மலேசியாவின் பேராக்கில் சேகரிக்கப்பட்ட மாதிரிக்காக 1926-ல் சி. போடன் குளோசு மற்றும் பிரடெரிக் நட்டர் சேசன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது சயனோப்சு பிராங்க்லினி மைனர். [7]
 • தாய்லாந்தில் சேகரிக்கப்பட்ட குக்குறுவான் ஜோசப் ஹார்வி ரிலேயால் 1934-ல் முன்மொழியப்பட்ட சயனோப்சு பிராங்க்லினி டிரான்ஜென்சிசு[8]

குக்குறுவான்களின் இன வரலாறு ஆராய்ச்சி, மெகலைமா பேரினத்தில் உள்ள பறவைகள் ஒரு கிளையினை உருவாக்குகின்றன. இதில் சுடர் சிறகு குக்குறுவான்கள் அடங்கும். இது சைலோபோகன் பேரினத்தில் வைக்கப்பட்ட ஒரே சிற்றினம் ஆகும். இந்த பேரினத்தில் முன்பு வைக்கப்பட்ட குக்குறுவான்கள் சைலோபோகன் பேரினத்தின் கீழ் மறுவகைப்படுத்தப்பட்டன.[9] இரண்டு தங்கத் தொண்டை குக்குறுவான் துணையினங்கள் 2014-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[10]

விளக்கம்

[தொகு]

தங்கத் தொண்டை குக்குறுவான் மேலே தெளிவான பச்சை நிறத்தில் வெளிர் மஞ்சள் கலந்த பச்சை நிற இறகுகளுடன், நீல நிற இறக்கைகள் மற்றும் வால் அடியில் நீல வரிகளுடன் காணப்படும். இதன் அலகு இருண்ட கருப்பு நிறத்திலும், கண்களைச் சுற்றி கருப்பு நிறமும் காணப்படும். நெற்றி கருஞ்சிவப்பு நிறத்திலும் தொண்டை ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இதன் கால்கள் பச்சை நிறத்தில் இருக்கும்.[2] இது 20.5–23.5 cm (8.1–9.3 அங்) நீளமும் 50–101 g (1.8–3.6 oz) எடையும் கொண்டது.[10]

பரவலும் வாழிடமும்

[தொகு]
பிரேசர்சு மலை, மலேசியா 1997

தங்கத் தொண்டை குக்குறுவான் நேபாளம், இந்தியா, பூட்டான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பகுதிகளில் வசிக்கிறது. வங்காளதேசத்தில் இதன் இருப்பு நிச்சயமற்றது. இது 900 முதல் 2,700 m (3,000 முதல் 8,900 அடி) உயரத்தில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஈரமான காடுகளில் வாழ்கிறது.[1]

ஓசை

[தொகு]

ஆணின் அழைப்பு மிகவும் சத்தமாக புக்வாக் என அமையும்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Psilopogon franklinii". IUCN Red List of Threatened Species 2016: e.T22726108A94911504. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726108A94911504.en. https://www.iucnredlist.org/species/22726108/94911504. பார்த்த நாள்: 19 November 2021. 
 2. 2.0 2.1 Blyth, E. (1842). "Notes on various Indian and Malayan birds". The Journal of the Asiatic Society of Bengal 11 (1): 160–195. https://archive.org/details/journalofasiatic111asia/page/167. 
 3. Gray, G. R. (1842). "Appendix to a List of the Genera of Birds". A List of the Genera of Birds (Second ed.). London: R. and J. E. Taylor. p. 12.
 4. Peters, J. L., ed. (1948). "Genus Megalaima G. R. Gray". Check-list of Birds of the World. Vol. 6. Cambridge, Massachusetts: Harvard University Press. pp. 31–40.
 5. Walden, A. (1875). "Descriptions of some undescribed Species of Birds discovered by Lieutenant Wardlaw Ramsay in Burma". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology. 4 15 (8): 400–403. https://archive.org/details/annalsmagazineof4151875lond/page/400. 
 6. Robinson, H. C.; Kloss, C. B. (1919). "On Birds from South Annam and Cochin China. Part I. Phasianidæ–Campophagidæ". Ibis 61 (3): 392–453. doi:10.1111/j.1474-919X.1919.tb02892.x. 
 7. Kloss, C. B.; Chasen, F. N. (1926). "Cyanops franklinii minor". Bulletin of the British Ornithologists' Club 46 (299): 57–58. https://archive.org/details/bulletinofbritis46tayl/page/56. 
 8. Riley, J. H. (1934). "One new Genus and three Races of Birds from the Malay Region". Proceedings of the Biological Society of Washington 47 (June): 115–117. https://archive.org/details/proceedingsofbi471934biol/page/116. 
 9. Moyle, R. G. (2004). "Phylogenetics of barbets (Aves: Piciformes) based on nuclear and mitochondrial DNA sequence data". Molecular Phylogenetics and Evolution 30: 187–200. doi:10.1016/S1055-7903(03)00179-9. 
 10. 10.0 10.1 10.2 Short, L. L.; Horne, J. F. M.; Kirwan, G. M. (2014). "Golden-throated Psilopogon franklinii". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D. A.; de Juana, E. (eds.). Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Vol. 7: Jacamars to Woodpeckers. Barcelona, Spain and Cambridge, UK: Lynx Edicions and BirdLife International.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Psilopogon franklinii
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: