உள்ளடக்கத்துக்குச் செல்

டோனி கிரெய்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி கிரேக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டோனி கிரேக்
உயரம்6 அடி 6 அங் (1.98 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 452)சூன் 8 1972 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 30 1977 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 15)ஆகத்து 24 1972 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூன் 6 1977 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 58 22 350 190
ஓட்டங்கள் 3,599 269 16,660 3,899
மட்டையாட்ட சராசரி 40.43 16.81 31.19 24.67
100கள்/50கள் 8/20 –/– 26/96 3/21
அதியுயர் ஓட்டம் 148 48 226 129
வீசிய பந்துகள் 9,802 916 52,513 8,435
வீழ்த்தல்கள் 141 19 856 244
பந்துவீச்சு சராசரி 32.20 32.57 28.85 23.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 33 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 8 n/a
சிறந்த பந்துவீச்சு 8/86 4/45 8/25 6/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
87/– 7/– 345/– 88/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 28 2009

அந்தோனி வில்லியம் கிரெய்க் (Anthony William Greig) என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேர்வுத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்து விளையாட்டு வர்ணனையாளராக மாறிய ஓர் ஆளுமையாவார். 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 அன்று இவர் பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த கிரேக் தனது இசுக்காட்லாந்திய பெற்றோரின் மரபு வழி அடிப்படையில் இங்கிலாந்து தேசிய அணியில் விளையாட தகுதி பெற்றார். கிரேக் ஆறு அடி ஆறு அங்குல உயரம் கொண்ட மிக உயரமான மனிதர் ஆவார்[1]. வலது கை மட்டையாளரகவும் மிதவேகப்பந்து வீச்சு மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சு ஆகிய இரண்டு வகையிலும் பந்து வீசக்கூடியவராகவும் கிரேக் திறமை கொண்டிருந்தார். 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் சசெக்சு அணியின் தலைவராகவும் கிரேக் விளையாடியுள்ளார்[2]. கிரேக்கின் இளைய சகோதரர் இயன் கிரேக்கும் தேர்வுத்துடுப்பாட்ட விளையாட்டு வீரர் ஆவார். இதேபோல இவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் முதல்தர துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர்[3].

இங்கிலாந்து நாட்டின் கவுண்டி துடுப்பாட்டத்தில் ஒரு முன்னணி வீரராக விளையாடிய கிரேக், சில முன்னாள் வீரர்கள் மற்றும் துடுப்பாட்ட பண்டிதர்களால் இங்கிலாந்தின் முன்னணி சர்வதேச பன்முக வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்[4][5][6].இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் சக வீரர்கள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர்களை கையெழுத்திட வைத்து உலக தொடர் துடுப்பாட்டத்தினைத் தொடங்க பலம் வாய்ந்த தொழில் அதிபரான கெர்ரி பாக்கருக்கு இவர் உதவினார். இதனால் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆல்வின் கல்லிசரனின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் காரணமாகவும், 1974-1975 ஆச்சு துடுப்பாட்ட தொடரில் ஆத்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டென்னிசு லில்லியுடன் அடிக்கடி ஏற்பட்ட மோதலாலும் கிரேக் பரவலாக அறியப்பட்டார் [2]. மேற்கிந்தியத் தீவுகளின் 1976 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவரது இழிவான நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற கிரெய்க் ஆத்திரேலிய நாட்டில் குடியேறிய பின்னர் வானொலி, தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகப் பணியாற்றினார். நீண்ட காலமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரெய்க், 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் நுரையீரலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது[7] 2012 டிசம்பர் 29 இல் கிரெய்க் இருதய நிறுத்தம் காரணமாகக் காலமானார்.[8].

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கிரேக் , இசுக்காட்லாந்தில் குடியேறிய தந்தை மற்றும் தென்னாப்பிரிக்காவில் பிறந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். தென்னாப்பிரிக்காவிலுள்ள குயீன்சுடவுன் நகரின் குயின்சு கல்லூரியில் கல்வி பயின்றார். குயின்சு கல்லூரியில் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக பல முன்னாள் சசெக்சு அணி வீரர்கள் நியமிக்கப்பட்டனர். கிரேக்கின் பள்ளி நாட்களில், யாக் ஓக்சு, ஆலன் ஓக்மேன், இயன் தாம்சன், ரான் பெல், ரிச்சர்ட் லாங்ரிட்சு மற்றும் மைக் பசு ஆகியோர் வெளிநாட்டிலிருந்து துடுப்பாட்ட விளையாட்டிற்காக வந்தவர்கள் அனைவரும் கிரேக்கின் துடுப்பாட்ட திறன்களைக் கவனித்தனர். கியூரி கோப்பை துடுப்பாட்ட போட்டியில் பார்டர் மாகாணத்திற்கான முதல் தர போட்டியில் கிரேக் விளையாடிய போது அவர்கள் இதை கவனித்தனர். கிரேக் 19 வயதில் சசெக்சு அணிக்காக தேர்வாவதற்கு இது வழிவகுத்தது. பல்கலைக்கழக கற்றலை தொடர்வதா அல்லது சசெக்சு அணியின் அழைப்பை ஏற்பதா என்பதில் முடிவெடுக்க இவரது தந்தை உதவினார் [9].

சசெக்சு துடுப்பாட்ட அணிக்கான தனது முதல் ஆட்டத்தில் வலுவான லங்காசயர் துடுப்பாட்ட அணியின் சிறப்பான பந்துவீச்சிற்கு எதிராக கிரேக் 230 நிமிடங்கள் ஆட்டகளத்தில் நின்று விளையாடி 156 ஓட்டங்கள் எடுத்தார் [2]. இவரது எதிர்காலத் திட்டம் திசைமாறியது. தனது தந்தைக்கு ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதினார். அதில் தான் பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்க திரும்பிவர மாட்டேன் என்று தெரிவித்தார். தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் திரும்பினாலும் இங்கிலாந்து அணியில் இடம்பெற வேண்டும் என்ற இலக்குடனேயே தொடர்ந்து விளையாடினார். இறுதியில் 1970-71 பருவத்தில் கிழக்கு மாகாண துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார் [10].

பிற்கால வாழ்க்கை

[தொகு]

உலகத் தொடர் துடுப்பாட்ட நாட்களில் நைன் நெட்வொர்க் ஊடகத்தின் உரிமையாளரான கெர்ரி பாக்கருடன் ஏற்பட்ட நட்பின் பின்னர், நைன் ஒளிபரப்பு துடுப்பாட்டப் போட்டிகளின் போது கிரேக்கிற்கு வர்ணனையாளராக பணி வழங்கப்பட்டது. இதன் பின்னர் கிரேக் தனது வாழ்நாள் முழுவதையும் ஆத்திரேலியாவில் கழித்தார். தனது துடுப்பாட்ட வர்ணனை தொழிலையும் அங்கு தொடர்ந்தார். துடுப்பாட்ட வரலாற்றில் சிறந்த துடுப்பாட்ட வர்ணனையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார், பக்கச்சார்மின்மை, நகைச்சுவை மற்றும் விளையாட்டைப் பற்றி மிகுந்த ஆர்வம் போன்ற திறமைகளுடன் தனித்தன்மையுடன் வர்ணனை செய்தார்.

ஐக்கிய இராச்சியத்தில் சேனல் ஃபோர், எசு.ஏ.பி.சி மற்றும் இங்கிலாந்து அணியின் 2012 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்திற்காக சிகை சுபோர்ட்சு போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கிரேக் பணியாற்றினார். இஎசுபிஎன் கிரிக் இன்ஃபோ ஒளிபரப்பிய தி டோனி கிரேக் சோ என்ற' வழக்கமான வாராந்திர நிகழ்ச்சியினையும் கிரேக் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கினார்,

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tony Greig". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 December 2010.
  2. 2.0 2.1 2.2 Bateman, Colin (1993). If The Cap Fits. Tony Williams Publications. pp. 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-869833-21-3.
  3. Tony Greig profile at CricketArchive. Retrieved 29 December 2012.
  4. Greg Chappell: "He wouldn't have made it as a bowler or batsman, but his determination made him a top all-rounder", Tossell, p. 93.
  5. Derek Underwood "... you never hear of him mentioned as being a top-quality cricketer, but he was." Tossell, p. 98.
  6. John Snow "... he was as good an all-rounder as Freddie Flintoff, if not better." Tossell, p. 98.
  7. "Tony Greig diagnosed with Lung cancer". Wisden India. 20 October 2012 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024022828/http://www.wisdenindia.com/cricket-news/tony-greig-diagnosed-lung-cancer/31444. 
  8. Hills, Brendan (2012-12-29). "Former England captain and cricket commentator Tony Greig passes away after battle with lung cancer". news.com.au. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. Wisden 1975
  10. "Wisden – Tony Greig". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_கிரெய்க்&oldid=3581768" இலிருந்து மீள்விக்கப்பட்டது