டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ்
இளம் செடி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. moroides
இருசொற் பெயரீடு
Dendrocnide moroides
(Wedd.) Chew[2]
Map
Dendrocnide moroides distribution in Australia
வேறு பெயர்கள் [2]
 • Laportea moroides Wedd.
 • Urtica moroides A.Cunn. ex Wedd.
 • Urticastrum moroides (Wedd.) Kuntze

டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ் (Dendrocnide moroides, பொதுவாக ஆஸ்திரேலியாவில் கொட்டு மரம், கொட்டு புதர் அல்லது ஜிம்பி-ஜிம்பி என அழைக்கப்படுகிறது) என்பது மேலேசியா மற்றும் ஆத்திரேலியாவின் மழைக்காடு பகுதிகளில் காணப்படும் ஒரு தாவரம் ஆகும்.[3] இதன் தொட்டால் எரிச்சலூட்டும் பண்புக்காக அறியப்படுகிறது. இது அர்ட்டிகேசீ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இந்த செடியில் உள்ள முட்கள் பட்டால் மிகவும் வலி ஏற்படும். இந்த வலி நீண்ட காலம் தொடரும். இதற்கு உள்ள பெயர்களில் ஒன்றான ஜிம்பி-ஜிம்பி என்ற பெயர் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் பழங்குடி குப்பி மக்களின் மொழியிலிருந்து வந்தது.

விளக்கம்[தொகு]

டி. மொராய்ட்ஸ் என்பது 3 மீ (10 அடி) க்கும் குறைவான உயரத்தில் பொதுவாக பூக்கும் மற்றும் பழம்தரும் ஒரு பல்லாண்டு தாவரமான ஒரு புதர் ஆகும். ஆனால் இது 10 மீ (33 அடி) வரை எட்டும். இதன் தண்டு, கிளைகள், இலைக்காம்புகள், இலைகள், பழங்கள் என அனைத்தும் கொட்டும் இழைகள் நிறைந்திருக்கும்.[3]:{{{3}}}[4]:{{{3}}}

இது 12–22 cm (4+128+12 அங்) நீளமும் 11–18 cm (4+12–7 அங்) அகலமும் கொண்ட பெரிய, இதய வடிவிலான, பல்விளிம்புடைய இலைகளைக் கொண்டுள்ளது. இலையின் நடுப்பகுதியின் இருபுறமும் ஆறு முதல் எட்டு ஜோடி பக்கவாட்டு நரம்புகள் உள்ளன. இலைக்காம்பு மிகவும் நீளமானது, இலைப்பரப்பு வரை நீளமானது, சுற்றி இலையடிச் செதில்கள் இருக்கும்.[3]:{{{3}}}[5]:{{{3}}}

பழம்

பூந்துணர் ஒரே மாதிரியானது (அரிதாக இருபால் செடி). [6]:{{{3}}} பூந்துணர் இலைக் கக்கத்தில் பிறக்கும். இது 15 செமீ (6 அங்குலம்) வரை நீளமாக வளரும், பெரும்பாலும் ஜோடியாக இருக்கும்.[5]:{{{3}}} இதில் ஆண் மற்றும் பெண் பூக்கள் இரண்டும் இருக்கும். அவை மிகவும் சிறியதாக இருக்கும், இதழ் வட்டத்தின் அளவு குறைவாக இருக்கும். இதழ் வட்டம் 1 cm (12 அங்) இக்கும் குறைவான அளவுள்ளதாக இருக்கும். ஆண்டு முழுவதும் பூக்கும், ஆனால் பெரும்பாலும் கோடையில் மிகுதியாக பூக்கும்.[3]:{{{3}}}[5]:{{{3}}}

இந்த தாவர இனத்தின் பழங்கள் ஒரு வெடியா உலர்கனி (ஒரு சிறிய விதை போன்ற பழம்) ஆகும். இது கோள வடிவில், இளஞ்சிவப்பு முதல் வெளிர் ஊதா நிறத்தில், மல்பெரி போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வெடியா உலர்கனியும், வெறும் 2 mm (332 அங்) நீளம் கொண்டவை. இவை சிறிய சதைப்பற்றுள்ள திசுப்பையில் உள்ளன.[3]:{{{3}}}[5]:{{{3}}} இந்த தாவரத்தின் மற்ற பகுதிகளைப் போலவே, இதன் பழக்குலையும் கொட்டும் இழைகள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் அவை அகற்றப்பட்டால் அவை உண்ணத்தக்கவை.[7]:{{{3}}}[8]:{{{3}}}[9]:{{{3}}}[10]:{{{3}}}

வகைபிரித்தல்[தொகு]

இந்த தாவர இனத்தின் மாதிரி 1819 ஆம் ஆண்டில் ஆலன் கன்னிங்காம் என்பவரால் எண்டெவர் ஆற்றுக்கு அருகில் சேகரிக்கப்பட்டது. [3]:{{{3}}} மேலும் 1857 ஆம் ஆண்டில் ஹக் அல்கெர்னான் வெட்டெல் என்பவரால் அவரது படைப்பான மோனோகிராபி டி லா ஃபேமில் டெஸ் உர்டிசீஸ், ஆர்க்கிவ்ஸ் டு மியூசியம் டி ஹிஸ்டோயர் நேச்சர்ல்லே இதழில் இது விவரிக்கப்பட்டது.[5]:{{{3}}}[11]:{{{3}}} தற்போதைய இருசொற் சேர்க்கை வீ-லெக் செவ் என்பவரால் 1966 இல் தி கார்டன்ஸ் புல்லட்டின் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.[12]:{{{3}}}

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Species profile—Dendrocnide moroides". Queensland Department of Environment and Science. Queensland Government. 20 October 2014.
 2. 2.0 2.1 "Dendrocnide moroides". Plants of the World Online. அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ. பார்க்கப்பட்ட நாள் 11 June 2021.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 F.A.Zich; B.P.M.Hyland; T.Whiffen; R.A.Kerrigan (2020). "Dendrocnide moroides". Australian Tropical Rainforest Plants Edition 8 (RFK8). Centre for Australian National Biodiversity Research (CANBR), Australian Government.
 4. F.A.Zich; B.P.M.Hyland; T.Whiffen; R.A.Kerrigan (2020). "Dendrocnide cordifolia". Australian Tropical Rainforest Plants Edition 8 (RFK8). Centre for Australian National Biodiversity Research (CANBR), Australian Government.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 Chew, W.-L.; Kodela, P.G. "Dendrocnide moroides". Flora of Australia. Australian Biological Resources Study, Department of Agriculture, Water and the Environment: Canberra. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
 6. Jackes, B.R.; Hurley, M. (1997). "A new combination in Dendrocnide (Urticaceae) in north Queensland". Austrobaileya 5 (1): 121–123. https://www.jstor.org/stable/41729927. 
 7. Cooper, Wendy; Cooper, William (1994). Fruits of the Rain Forest - A Guide to Fruits in Australian Tropical Rain Forests. GEO Productions. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-19803-3.
 8. Low, Tim (1998). Wild Food Plants of Australia. Sydney: Angus & Robertson Publishers. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-16930-6.
 9. Robertson, P.A.; Macfarlane, W.V. (1957). "Pain-Producing Substances From The Stinging Bush Laportea Moroides". Australian Journal of Experimental Biology and Medical Science 35 (4): 381–393. doi:10.1038/icb.1957.41. பப்மெட்:13471452. https://onlinelibrary.wiley.com/doi/10.1038/icb.1957.41. 
 10. Schmitt, C.; Parola, P.; de Haro, L. (1 December 2013). "Painful Sting After Exposure to Dendrocnide sp: Two Case Reports". Wilderness and Environmental Medicine 24 (4): 471–473. doi:10.1016/j.wem.2013.03.021. பப்மெட்:23870765. https://www.wemjournal.org/article/S1080-6032%2813%2900088-4/fulltext. 
 11. Cooper, Wendy; Cooper, William T. (June 2004). Fruits of the Australian Tropical Rainforest. Clifton Hill, Victoria, Australia: Nokomis Editions. p. 547. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780958174213.
 12. "Neurotoxic peptides from the venom of the giant Australian stinging tree". Science Advances (American Association for the Advancement of Science) 6 (38): eabb8828. 16 September 2020. doi:10.1126/sciadv.abb8828. பப்மெட்:32938666. Bibcode: 2020SciA....6.8828G.