உள்ளடக்கத்துக்குச் செல்

டெகுவான்டிபெக் குழிமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
டெகுவான்டிபெக் ஜாக் குழி முயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. flavigularis
இருசொற் பெயரீடு
Lepus flavigularis
வாக்னர், 1844
டெகுவான்டிபெக் ஜாக் குழி முயலின் பரவல்

டெகுவான்டிபெக் ஜாக் குழி முயல் (ஆங்கிலப்பெயர்: Tehuantepec jackrabbit, உயிரியல் பெயர் Lepus flavigularis) என்பது மெக்சிகோவில் காணப்படும் ஒரு வகை பாலூட்டி ஆகும். இதன் காதுகளின் அடிப்பகுதியில் இருந்து பிடரி வரை இரண்டு கருப்பு கோடுகளும் மற்றும் இதன் பக்க வாட்டில் வெள்ளை நிறமும் காணப்படும்.[3] இதன் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும், மேல்பகுதி பிரகாச பழுப்பு நிறம் மற்றும் மேலோட்டமாக கருப்பு நிறத்திலும், பின்பகுதி சாம்பல் நிறத்திலும் மற்றும் வால் கருப்பு நிறத்திலும் இருக்கும். ஜாக் குழிமுயல்களிலேயே இது ஒரு பெரிய இனமாகும். இதற்கு பெரிய காதுகளும் கண்களும் உள்ளன. வயது வந்த முயல்கள் 3.5 முதல் 4 கிலோ வரை இருக்கும்.

பரவல்

[தொகு]

இது அரிதாக மெக்சிகோவின் ஒக்சாகா பகுதியில் மட்டுமே காணப்படும் முயல் ஆகும். இது இசுதுமோ டி டெகுவான்டிபெக் பகுதியின் டெகுவான்டிபெக் வளைகுடாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் சவானாக்கள் மற்றும் உப்புநீர் குளங்கள் உடைய கடற்கரைகளில் காணப்படும் புல் நிறைந்த மணல் மேடுகளில் காணப்படும். இவை ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாக பிரிக்கப்பட்ட மூன்று சிறிய எண்ணிக்கைகளில் காணப்படுகின்றன.

இந்த முயலின் முந்தைய கால பரவல் விவரத்துடன் விளக்கப்படவில்லை. எனினும் டெகுவான்டிபெக்கின் இசுதுமசின் ஒக்சாகாவில் உள்ள சலீனா கிரசிலிருந்து சியாபாசில் உள்ள டோனாலா வரை மெக்சிகோவின் அமைதிப் பெருங்கடல் கடற்கரையில் சுமார் 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே இவை வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.[4]

உசாாத்துணை

[தொகு]
  1. Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Cervantes, F.A.; Lorenzo, C.; Farías, V.; Vargas, J. (2008). "Lepus flavigularis". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T11790A3306162. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T11790A3306162.en. http://www.iucnredlist.org/details/11790/0. பார்த்த நாள்: 24 December 2017. 
  3. Flux, J. E. C.; R. Angermann (1990). "The hares and jackrabbits". In Chapman, J. A.; J. E. C. Flux (eds.). Rabbits, hares, and pikas. Status survey and conservation action plan. Gland, Switzerland: International Union for Conservation of Nature and Natural Resources. pp. 61–94. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  4. Nelson, E. W. (1909). "The rabbits of North America". North American Fauna 29: 9–287. doi:10.3996/nafa.29.0001.