டி. வி. வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. வி. வரதராஜன் என்று அழைக்கப்படும் எஸ். வரதராஜன் என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகர், தமிழ்த் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பவராக இருந்தார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வரதராஜன் இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்தார். [1]

தொழில்[தொகு]

வரதராஜன் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் மிகவும் பழக்கமான முகங்களில் ஒன்றாக உருவெடுத்தார். பின்னர் இவருக்கு ஒய். ஜி. மகேந்திரனின் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1990 களில், வரதராஜன் தானே ஒரு சொந்த நாடகக் குழுவை உருவாக்கினார். இவரது நாடகங்களில் ஒன்றான இலவச இணைப்பு மைலாப்பூர் அகாதமியிலிருந்து ஆறு விருதுகளை வென்றது. [1]

மூத்த தமிழ் திரைப்பட இயக்குனரான கே. பாலசந்தர் இவருக்கு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதிலிருந்து, இவர் பாலசந்தரின் தொலைக்காட்சி தொடர்களில் அதாவது பிரேமி, கையளவு மனசு, காதல் பகடை ஆகிய மூன்று தொடர்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். [2]

இவரது அண்மைய நாடகமான, 'இது நம்ம நாடு' மகத்தான வெற்றியைப் பெற்றது. 'இது நம்ம நாடு' நாடகமானது ஒரு அரசியல் நையாண்டியாகும். அது 2013 செப்டம்பர் 11 அன்று அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தை 'துக்ளக்' சத்யா எழுதியுள்ளார், வரதராஜன் இயக்கி அதில் நடித்தார். [3]

நாடகங்கள்[தொகு]

நாடகம் Ref.
ஸ்ரீ தியாகராஜா [4]
கையளவு மனசு [2]
இது நம்ம நாடு [3]

திரைப்படவியல்[தொகு]

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1983 அந்த சில நாட்கள்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா
1997 அருணாச்சலம்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஸ்ரீகாந்தை நேர்காணல் காண்பவர்
தொலைக்காட்சி
ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் அலைவரிசை குறிப்புகள்
1996 - 1998 காதல் பகடை மோகன் பாபு சன் தொலைக்காட்சி
1996-1997 கையளவு மனசு சன் தொலைக்காட்சி
2002-2003 சஹானா ஜெயா தொலைக்காட்சி
2003 - 2005 அண்ணி மருத்துவர் ஜெயா தொலைக்காட்சி
2006 பெண் சன் தொலைக்காட்சி
2014 - 2017 தாமரை ராகவன் சன் தொலைக்காட்சி

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._வரதராஜன்&oldid=3170913" இருந்து மீள்விக்கப்பட்டது