டிசிப்ரோசியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மூவயோடைடு, மூவயோடோடிசிப்ரோசியம்
இனங்காட்டிகள்
15474-63-2
ChemSpider 76618
EC number 239-493-4
InChI
  • InChI=1S/Dy.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: RZQFCZYXPRKMTP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 519122
SMILES
  • I[Dy](I)I
பண்புகள்
DyI3
வாய்ப்பாட்டு எடை 543.21 g·mol−1
தோற்றம் மஞ்சள் பச்சை திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 955 °C (1,751 °F; 1,228 K)
கொதிநிலை 1,320 °C (2,410 °F; 1,590 K)
கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டிசிப்ரோசியம்(III) அயோடைடு (Dysprosium(III) iodide) DyI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். டிசிப்ரோசியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இரும சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

டிசிப்ரோசியத்துடன் அயோடினைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) அயோடைடு உருவாகிறது. 2Dy + 3I → 2DyI3 பாதரச(II) அயோடைடுடன் டிசிப்ரோசியம் துகள்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் டிசிப்ரோசியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது. 2Dy + 3HgI2 → 2DyI3 + 3Hg

இயற்பியல் பண்புகள்[தொகு]

டிசிப்ரோசியம்(III) அயோடைடு நீரில் கரையக்கூடிய ஒரு நீருறிஞ்சும் சேர்மமாகும்.[2][3] மஞ்சள்-பச்சை செதில் திண்மமாக இது காணப்படுகிறது.[4] R3 என்ற இடக்குழுவும் பிசுமத்(III) அயோடைடு வகையிலான முக்கோண வடிவ படிக அமைப்பையும் கொண்டுள்ளது.

பயன்[தொகு]

வெண்மை நிற ஒளியை உருவாக்கும் வாயு விளக்குகளில் டிசிப்ரோசியம்(III) அயோடைடு பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]