உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோநைட்ரைடு, அசானைலிடின்டிசிப்ரோசியம்
இனங்காட்டிகள்
12019-88-4
EC number 234-649-8
InChI
  • InChI=1S/Dy.N
    Key: IBIOTXDDKRNYMC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82803
  • [Dy]#N
பண்புகள்
DyN
வாய்ப்பாட்டு எடை 176.51 g·mol−1
தோற்றம் solid
அடர்த்தி 9.93 கி/செ.மீ3[1]
தண்ணீருடன் வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம் நைட்ரைடு (Dysprosium nitride) என்பது DyN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2]

தயாரிப்பு

[தொகு]

800-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் நைட்சனுடன் நன்றாக அரைக்கப்பட்ட டிசிப்ரோசியம், டிசிப்ரோசியம் ஐதரைடு அல்லது டிசிப்ரோசியம் இரசக்கலவை ஆகியவற்றை சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம் நைட்ரைடு உருவாகும்.[3][4]

2Dy + N2 -> 2DyN

இயற்பியல் பண்புகள்

[தொகு]

டிசிப்ரோசியம் நைட்ரைடு a = 0.490 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் கனசதுரப் படிக அமைப்பில் சாம்பல் நிறப் படிகங்களாக உருவாகிறது.[1] இது ஒரு நல்ல மின்சார கடத்தியாகும். தண்ணீருடன் நன்றாக வினைபுரியும். காந்த பண்புகள் மற்றும் அதிக உருகுநிலைக்காக டிசிப்ரோசியம் நைட்ரைடு நன்கு அறியப்படுகிறது. பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகளில் சாத்தியமான பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Lide, David R. (26 June 2006). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. p. 4-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  2. Ettmayer, Peter; Waldhart, Johann; Vendl, Alfred (1979). "Ûber die Mischbarkeit von UN mit LaN, CeN, PRN, NDN, SMN, GDN, DyN, und ErN". Monatshefte fuer Chemie 110 (5): 1109–1112. doi:10.1007/BF00910958. 
  3. Jaques, Brian J.; Osterberg, Daniel D.; Alanko, Gordon A.; Tamrakar, Sumit; Smith, Cole R.; Hurley, Michael F.; Butt, Darryl P. (15 January 2015). "In situ characterization of the nitridation of dysprosium during mechanochemical processing". Journal of Alloys and Compounds 619: 253–261. doi:10.1016/j.jallcom.2014.08.193. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/pii/S0925838814020684. பார்த்த நாள்: 1 February 2024. 
  4. Olevsky, E. A.; Bordia, Rajendra (4 February 2010). Advances in Sintering Science and Technology (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-59970-9. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
  5. "Dysprosium Nitride (DyN) Powder (CAS No. 12019-88-4) for Sale" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசிப்ரோசியம்_நைட்ரைடு&oldid=3910632" இலிருந்து மீள்விக்கப்பட்டது