டிக்சோனியா ஆர்போரெசென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Saint Helena tree fern
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. arborescens
இருசொற் பெயரீடு
Dicksonia arborescens
L'Hér.
இலையின் தாவரவியல் விளக்கம்

டிக்சோனியா ஆர்போரெசென்ஸ் (தாவர வகைப்பாட்டியல்: Dicksonia arborescens) அல்லது செயின்ட் ஹெலினா மர பெரணி என்றழைக்கப்படும் இத்தாவரம் பெரணி வகையைச் சார்ந்ததாகும். செயின்ட் ஹெலினா தீவின் மத்திய முகட்டின் மிக உயர்ந்த பகுதிகளில் உள்ள "அடர்த்தியான மர பெரணி" வகைத் தாவரமான இது டிக்சோனியா பேரினத்தின் வகைப்பாட்டில் அடங்கும்.

பண்டைய தாவரங்களின் கடைசி எச்சங்களில் ஒன்றான பெரணி தாவர வகையில் இது முக்கியமானதாகும். இந்த மர பெரணி தாவரத்தின் தண்டுகளில் பிற உள்ளூர் தாவரங்கள் பல நாற்றுகளாக முளைக்கின்றன, இதனால் இது இத்தகைய பிற பூர்வீக தாவரங்களுக்கு நாற்றங்காலாகவும் உள்ளது.

உலகம் முழுவதும் டிக்சோனியா பேரினத்தில் பரவியுள்ள பல இனங்கள் பரவலாக காணப்படுகின்றது. 1789 ஆம் ஆண்டில் எல்'ஹெரிட்டியர் என்பவர் லண்டனில் வாழ்ந்தபோது அவர் அங்கே கண்ட பயிர் செய்யப்பட்ட மாதிரிகளிலிருந்து செயிண்ட் ஹெலினா இனத்தை அடையாளம் கண்டுள்ளார்.[1]

சிலிக்கு மேற்கே உள்ள ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட மற்றொரு இனத்தாவரமான டிக்சோனியா பெர்டேரியானாவுடன் இந்த இனம் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. L'Héritier's original description online on Project Gutenberg http://www.gutenberg.org/files/38937/38937-h/38937-h.htm#Dicksonia_arborescens L'Héritier's original description online on Project Gutenberg. {{cite web}}: Check |url= value (help); Missing or empty |title= (help)
  2. Noben, Sarah; Kessler, Michael; Quandt, Dietmar; Weigand, Anna; Wicke, Susann; Krug, Michael; Lehnert, Marcus (2017-07-11). "Biogeography of the Gondwanan tree fern family Dicksoniaceae-A tale of vicariance, dispersal and extinction". Journal of Biogeography 44 (11): 2648–2659. doi:10.1111/jbi.13056. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-0270. 
  • Cronk, Q.C.B. (1995) The endemic Flora of St Helena. Anthony Nelson Ltd, Oswestry.