ஜோத்ஸ்னா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோத்ஸ்னா ஜோதி பட்
பிறப்பு(1940-03-06)6 மார்ச்சு 1940
மாண்டவி, குஜராத், கட்ச் மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூலை 2020(2020-07-11) (அகவை 80)
வடோதரா, குசராத்து, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், வதோதரா
அறியப்படுவதுசுட்டாங்கல், மட்பாண்டம்
வாழ்க்கைத்
துணை
ஜோதி பட்

ஜோத்ஸ்னா ஜோதி பட் (Jyotsna Jyoti Bhatt) (6 மார்ச் 1940 [1]11 சூலை 2020) இந்தியாவைச் சேர்ந்த மட்பாண்டக் கலைஞரும், குயவனுமாவார். இவர் முதலில் வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நாற்பது ஆண்டுகள் கற்பித்தார்.

சுயசரிதை[தொகு]

ஜோத்ஸ்னா பட் 1940 மார்ச் 6 அன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்டவியில் பிறந்தார். இவர் மும்பையில் சர் ஜே.ஜே கலைப்பள்ளியில் ஒரு வருடம் படித்தார். பின்னர் சங்கோ சௌதுரியின் கீழ் சிற்பக்கலையை படிக்க 1958இல் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு மட்பாண்டங்களில் ஆர்வம் காட்டினார். 1960களின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் பெருநகரத்தில் உள்ள புரூக்ளின் அருங்காட்சியக கலைப் பள்ளியில் ஜோலியன் ஹோஃப்ஸ்ட்டின் கீழ் மட்பாண்டங்களைப் படித்தார். [2] [3] பின்னர், இவர் இந்தியாவுக்குத் திரும்பி வடோதராவில் குடியேறினார். 1972ஆம் ஆண்டில், மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத்தில் உள்ள சிற்பத்தின் சுட்டாங்கல் அரங்கத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு இவர் 40 ஆண்டுகள் பணியாற்றி, 2002 இல் மட்பாண்டத் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.

பாணி[தொகு]

இவரது படைப்புகள் உலகம் முழுவதும் சேகரிக்கப்படுகின்றன. தனது நீண்ட தொழில் வாழ்க்கையில் இவர் ஸ்டோன்வேர் மற்றும் சுடுமண் பாண்டம் இரண்டிலும் பரிசோதனை செய்தார். தனது சுட்டாங்கல் பணிகளில், நீலத்துடன் பாசி பச்சை மற்றும் பிற இயற்கை வண்ணங்களுடன் இணைந்து மெருகூட்டல்களை விரும்பினார். இவர் தனது படைப்புகளில் நவீன மற்றும் பாரம்பரிய பாணிகளை இணைக்கும் கார மண்கள், உருவமற்ற அச்சுகள் மற்றும் பல்வேறு தாதுக்களை அடிக்கடி பயன்படுத்தினார். இவரது படைப்புகள் இயற்கையின் மீதான ஆர்வத்தை பிரதிபலித்தன. இவரது ஏராளமான படைப்புகள் பூனைகள், நாய்கள், பறவைகள், தாமரை மொட்டுகள், பொம்மைகள் மற்றும் தட்டுகளை சித்தரிக்கின்றன. [4][3][5][6][7]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஜோத்ஸ்னா பட் தனது கல்லூரி ஆண்டுகளில் ஜோதி பட் என்ற ஓவியரை சந்தித்தார். பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். [4] இவர்கள் வதோதராவில் வசித்து வந்தனர். [8] இவர்களுக்கு ஜெய் என்ற மகள் இருந்தாள். They had a daughter, Jaii.[3]

இறப்பு[தொகு]

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2020 சூலை 11 அன்று ஜோத்ஸ்னா பட் இறந்தார்.[4][9] வதோதராவில் உள்ள வாடி வாடி தகனத்தில் தகனம் செய்யப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Reference India: Biographical Notes about Men & Women of Achievement of Today & Tomorrow. Rifacimento International. 2005. https://books.google.com/books?id=k2NmAAAAMAAJ&q=Jyotsna+Bhatt+b+March+6+,+1940&dq=Jyotsna+Bhatt+b+March+6+,+1940&hl=en&sa=X&ved=0ahUKEwiAwen748vqAhWNHhQKHfpPDjMQ6AEILDAB. 
  2. "Renowned ceramic artist Jyotsna Bhatt passes away" (in en). 11 July 2020. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/jyotsna-bhatt-dead-ceramic-artist-6501111/. 
  3. 3.0 3.1 3.2 3.3 Rupera, Prashant (12 July 2020). "Queen of studio pottery, Jyotsna Bhatt dies at 80". https://timesofindia.indiatimes.com/city/vadodara/queen-of-studio-pottery-jyotsna-bhatt-dies-at-80/articleshow/76915344.cms. 
  4. 4.0 4.1 4.2 "Renowned ceramic artist Jyotsna Bhatt passes away" (in en). 11 July 2020. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/jyotsna-bhatt-dead-ceramic-artist-6501111/. 
  5. "Ceramic artist Jyotsna Bhatt sculpts nature in matte glaze" (in en-US). 7 November 2017. https://www.architecturaldigest.in/content/jyotsna-bhatt-ceramic-artist-red-earth-baroda/. 
  6. Nair, Uma (25 November 2017). "Agile hands inert stoneware" (in en). http://www.millenniumpost.in/sundaypost/beacon/agile-hands-inert-stoneware-272724. 
  7. "Silken glow". https://www.telegraphindia.com/opinion/silken-glow/cid/1456729. 
  8. "Jyotsna Bhatt | Gallery Ark" (in en-US). 23 December 2019. https://theark.in/artists/jyotsna-bhatt/. 
  9. "अंतरराष्ट्रीय शिल्पकार ज्योत्स्नाबेन भट्ट का वड़ोदरा में निधन". https://www.sanjeevnitoday.com/gujarat/international-craftsman-jyotsnaben-bhatt-dies-in-vadodara/20200712/373501. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோத்ஸ்னா_பட்&oldid=3117913" இருந்து மீள்விக்கப்பட்டது