தட்டு
தட்டு (Plate) என்பது பரந்த, குழிவுடன் காணப்படும். ஆனால் உணவு உண்ணும் தட்டுகள் பெரும்பாலும் தட்டையாக காணப்படும். தட்டுகள் விழாக்களிலும், அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தட்டுகள் வட்ட வடிவத்திலும், வேறு பல வடிவங்களிலும் உள்ளன. நீர் எதிர்ப்பு தன்மையுடைய தட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக தட்டுகள் வட்டமாகவும் அதன் ஓரப்பகுதியான விளிம்புகள் சற்று எழும்பியும் இருக்கும். தட்டுகள் ஒவ்வொன்றும் வளைவாகவோ, அல்லது அகன்ற வாயுடனோ அல்லது எழும்பிய பகுதியுடனோ இருக்கும். விளிம்பில்லாத தட்டுகள், குறிப்பாக வட்டமான வடிவத்தை வைத்திருந்தால் கிண்ணங்கள் என கருதலாம். தட்டுகள் உணவு பாத்திரங்களாகவும், மேசை பாத்திரங்களாகவும் உள்ளன. மரம் ,மட்பாண்டம் அல்லது உலோகத்தால் ஆன தட்டுகள் பழம்பண்பாட்டில் இருந்தது.[1]


வடிவம்
[தொகு]தட்டு அமையும் விதம் பின்வருமாறு:
- உணவு வைக்கும் பகுதி- தட்டின் கீழ் பகுதி.
- அகன்ற வாய் பகுதி, தட்டின் மேற்புறமான வெளிப்புற பகுதி (சில நேரங்களில் தவறாக விளிம்பு என அழைக்கப்படுகிறது.) அதன் அகலம் அதன் விகிதத்தை பொறுத்து பெரிதும் மாறுபடும். இது வழக்கமாக சற்று மேல்நோக்கி, சாய்வாக அல்லது இணையாக காணப்படுகிறது. அனைத்து தட்டு்களும் விளிம்புடன் இருப்பதில்லை.
- விளிம்பு, தட்டின் வெளிப்புறப்பகுதி. விளிம்புப் பகுதி அலங்காரப்படுத்தப்பட்டு மின்னும் விதமாக இருக்கும்.
- தட்டின் அடித்தளப்பகுதி.
வழக்கமான அகன்ற, தட்டையான வாய் பகுதி எழுப்பப்பட்ட தட்டுகள், பழைய ஐரோப்பியர்களின் உலோகத் தட்டு வடிவங்களிலிருந்து பெறப்பட்டது. சீனர்களின் பீங்கான் தட்டுகள் குறுகிய வாய் பகுதியுடனும், விளிம்புகள் வளைந்தும் இருக்கும். இவ்வகை தட்டுகளில் உலர்ந்த வகை உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. குறிப்பாக மரத்தட்டுகளும் அவ்வாறே அமைந்தன.
செய்பொருட்கள்
[தொகு]பெரும்பாலான தட்டுகள் எஃகு, சீனா பீங்கான், பளபளப்பான மட்பாண்டம், களிமண் பொருட்களால் செய்யப்பட்டவை. அதேபோல் மற்ற பாரம்பரிய பொருட்கள் செய்ய, கண்ணாடி, மரம் அல்லது உலோகம் எப்போதாவது கல் போன்றவை பயன்படுத்தப்படும்.பலவகையான நெகிழி பிற நவீன பொருட்கள் இருந்தாலும் பீங்கான் தட்டுகள் போன்ற சிறப்புப் பயன்கள் தவிர மண்பாண்டங்கள் பிற பாரம்பரிய பொருட்கள் மிகவும் பொதுவானவை. தவிர, இவை குழந்தைகளுக்கான பயன்பாட்டில் சிறப்பு வகிக்கிறது. உயர்வகைப் பீங்கான், எஃகு சீனா வகைத் தட்டுகளை இப்பொழுது உலகின் அனைத்து வகையான மக்களும் பெற முடிகிறது. மிகவும் நீடித்த மலிவான உலோகத் தட்டுகள், வளரும் உலகில் பொதுவானவை. பெரும்பாலும் நெகிழி, காகிதக்கூழ் அல்லது ஒரு கலவையில்,நெகிழி பூசப்பட்ட காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும். செய்தட்டுகள் 1904 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெலமைன் பிசின் அல்லது கோர்லேல் போன்ற மென்மையான கண்ணாடியைப் பயன்படுத்தலாம். சிலர் ஒரு மண்பாண்ட உலோகம் மூலம் வெவ்வேறு நிறங்களுடன் கூடிய தட்டுகளைப் பல கட்டமைப்புகளுடன் உருவாக்குகின்றனர்.
அளவும் வகைகளும்
[தொகு]உணவு பரிமாறப்படும் தட்டுகள் பல வகையிலும் வெவ்வேறு அளவிலும் உள்ளன. அவை பின்வருமாறு[2]
- ஏந்து தட்டு
- திண்பண்டம் வைக்கும் தட்டு
- ரொட்டி வைக்கும் தட்டு
- மதிய உணவு தட்டு
- இரவு உணவு தட்டு
- அலங்காரத் தட்டு
தட்டுகள் பல வடிவங்களில் உள்ளன. ஆனால் தட்டில் உள்ள உணவுப் பொருள் கீழே சிந்தாமல் இருக்க விளிம்புகள் உதவுகின்றன. அவை பெரும்பாலும் வெள்ளை அல்லது சந்தன நிறத்தில் இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Venable, Charles L.; et al. (2000). China and Glass in America, 1880-1980: From Table Top to TV Tray. New York: Harry N. Abrams. ISBN 0-8109-6692-1.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-16. Retrieved 2017-07-08.