ஜோசப் தளியத்
ஜோசப் தளியத் ஜூனியர் (Joseph Thaliath Jr.) தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.[1]
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் மகன். கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோசப் தளியத் தனது பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு வந்து இயக்குனர் எஸ். சௌந்தரராஜன் என்பவரின் உதவியாளராகப் பணியாற்றினார்.[2] சிறிது காலத்தில் தளியத் சொந்தமாக சிட்டாடல் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். கீழ்ப்பாக்கம் இலண்டன் தெருவில் இது அமைந்திருந்தது.
அக்காலத்தில் பிரபலமான படத் தயாரிப்பாளரும் கலையக உரிமையாளருமான எப். நாகூருடன் சேர்ந்து 1948 ஆம் ஆண்டில் டி. ஆர். மகாலிங்கத்தின் நடிப்பில் ஞானசௌந்தரி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 1950 ஆம் ஆண்டில் மகாலிங்கத்தின் நடிப்பில் இதய கீதம் என்ற காதல் கதையைத் தானே எழுதி இயக்கினார். இத்திரைப்படத்தை தளியத் இந்தியில் ஸ்ரீவன்தாரர் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்.
பிரபல நடிகர்கள் சி. எல். ஆனந்தன், ஜெய்சங்கர் ஆகியோரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜோசப் தளியத்.
திரைப்படவியல்
[தொகு]- ஞானசௌந்தரி (1948)
- இதய கீதம் (1950)
- ஜீவா தாரா (1951 இந்தி படம்)
- ஆத்மசாந்தி (1952 மலையாளப் படம்)
- மல்லிகா (1957)
- பாயல் (1957 இந்தி படம்)
- விஜயபுரி வீரன் (1960)
- தீன் தோஸ்த் (1964)
- இரவும் பகலும் (1965)
- விளக்கேற்றியவள் (1965)
- காதல் படுத்தும் பாடு (1966)