உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லிகா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மல்லிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மல்லிகா
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோசப் தளியத் ஜூனியர்
தயாரிப்புஜோசப் தளியத் ஜூனியர்
கதைஎம். ஏ. துரை
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
பத்மினி
டி. எஸ். பாலையா
மற்றும் பலர்
கலையகம்சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன்
வெளியீடுசூலை 19, 1957 [1]
ஓட்டம்.
நீளம்16921 அடி
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

மல்லிகா 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தளியத் ஜூனியர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

திரைக்கதை

[தொகு]

பர்மாவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஒருவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதனால் தன் குடும்பத்தோடு இந்தியாவுக்குத் திரும்புகிறார். வரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அவ்ரும் அவரது மனைவியும் உயிரிழக்கின்றனர். பெரிய மகள் கமலாவும் சிறிய மகள் பத்மாவும் உயிர் தப்புகிறார்கள். பத்மாவுக்குக் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவுக்கும், தங்கையின் சிகிச்சைக்குப் பணம் சேர்க்கவும் கமலா ஒரு நடனக் குழுவில் சேருகிறாள். பல இடங்களில் நடனமாடிப் புகழ் அடைகிறாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மோகன் என்ற வாலிபனைக் கண்டு அவனை விரும்புகிறாள். அவள் நாட்டியக்காரி என்பதால் மோகனின் பெற்றோர் மோகன் அவளைத் திருமணம் செய்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மோகனின் தந்தையை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். மோகன் கைது செய்யப்படுகிறான். அவனைக் காப்பாற்றுவதற்காக கமலா பழியைத் தான் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் இறுதியில் உண்மை தெரியவந்து மோகன், கமலா ஒன்று சேருகிறார்கள். பத்மாவின் கண்பார்வையும் குணமடைகிறது.[2]

நடிகர்கள்

[தொகு]

இப்பட்டியல் தி இந்து நாளேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது.[2]

தயாரிப்பு விபரம்

[தொகு]

இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜோசப் தளியத் ஜூனியருக்குச் சொந்தமான சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் இதுவாகும். வசனம் எழுதிய நாஞ்சில் ராஜப்பா உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். நடன ஆசிரியராக ஹீராலால் பணியாற்றினார்கள். அவருக்கு உதவியாக சின்னி, சம்பத் ஆகியோர் பணியாற்றினர். பிற்காலத்தில் நாயுடு ஹால் நிறுவனத்தைத் தொடங்கிய எம். ஜி. நாயுடு இத்திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  2. 2.0 2.1 2.2 2.3 "Mallika 1957". தி இந்து. 13 டிசம்பர் 2014. Archived from the original on 2016-11-08. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_(திரைப்படம்)&oldid=3796956" இலிருந்து மீள்விக்கப்பட்டது