உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயலட்சுமி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயலட்சுமி
பிறப்புஜெயலட்சுமி ரெட்டி
1958
ஆந்திர பிரதேசம்
இறப்பு1980 (22 வயதில்)
சென்னை, தமிழ்நாடு,
 இந்தியா
மற்ற பெயர்கள்படாபட் ஜெயலட்சுமி, சுப்ரியா

ஜெயலட்சுமி ரெட்டி அல்லது பரவலாக படாபட் ஜெயலட்சுமி (1958–1980) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் சுப்ரியா என்ற பெயரில் நடித்தார். தமிழில் அவள் ஒரு தொடர்கதை, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தொடக்ககால வாழ்க்கை

[தொகு]

ஜெயலட்சுமி, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் ஏற்ற "படாபட்" என்ற வேடம் பலராலும் அறியப்பட்டதால் "படாபட்" ஜெயலட்சுமி என்றவாறு அழைக்கப்படலானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

எம். ஜி. ராமச்சந்திரனது உறவினர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், 1980ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.[1]

திரை வாழ்க்கை

[தொகு]

1972 ஆவது ஆண்டில் அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளியான தீர்த்தயாத்ரா மலையாளத் திரைப்படத்தின் மூலமாக சுப்ரியா என்ற பெயரில் நடிகையாக அறிமுகமானார். 1973இல் இது மனுசுயனோ? என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தமிழில் கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் ஜெயலட்சுமி என்ற வேடத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அந்துலேனி கதா என்ற திரைப்படத்தில் படாபட் என்ற வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசினிகாந்த், கமல்ஹாசன், கிருஷ்ணா, என். டி. ராமாராவ், சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தவர்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1972 அர்த்தயாத்ரா பார்வதி மலையாளம் முதல் திரைப்படம்
1973 இது மனுசுயனோ? மலையாளம்
1974 அவள் ஒரு தொடர்கதை தமிழ் தமிழில் முதலாவது திரைப்படம்
1975 சொர்க்கம் நரகம் தெலுங்கு தெலுங்கில் முதலாவது திரைப்படம்
1975 தேவார கண்ணு ரேகா கன்னடம் கன்னடத்தில் முதலாவது திரைப்படம்
1976 ஜோதி சசிரேகா தெலுங்கு
1976 அந்துலேனி கதா கன்னடம்
1976 அன்னக்கிளி சுமதி தமிழ்
1977 அவர் எனக்கே சொந்தம் தமிழ்
1977 கவிக்குயில் தமிழ்
1978 வருவான் வடிவேலன் தமிழ்
முள்ளும் மலரும் மங்கா தமிழ்
குங்குமம் கதை சொல்கிறது தமிழ்
1979 ஆறிலிருந்து அறுபது வரை தமிழ்
Korikale Gurralaite
1980 ஜதாரா
காளி தமிழ்
ஒந்து என்னு ஆறு கண்ணு கன்னடம்
ராம் ராபர்ட் ரஹீம் தெலுங்கு
1981 நியாயம் காவாலி ஜெயலட்சுமி தெலுங்கு
திருகு லேனி மனுசி தெலுங்கு
1983 யாமிருக்க பயமேன் தமிழ் இறுதியாக வெளியான திரைப்படம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Why South Indian heroines are embracing death". Mid-day.com. 20 April 2002. http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm. பார்த்த நாள்: 25 May 2010. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயலட்சுமி_(நடிகை)&oldid=4114457" இலிருந்து மீள்விக்கப்பட்டது