ஜெயகர் கடல்குதிரை
| ஜெயகர் கடல்குதிரை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | சிங்னாதிபார்ம்சு |
| குடும்பம்: | சிங்னாதிடே |
| பேரினம்: | கிப்போகாம்பசு |
| இனம்: | கி. காசுகாசியா |
| இருசொற் பெயரீடு | |
| கிப்போகாம்பசு காசுகாசியா (பெளலென்ஜர், 1900) | |
ஜெயகர் கடல் குதிரை (Jayakar's seahorse)(கிப்போகாம்பசு ஜெயகாரி) என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த கடலோர மீன் சிற்றினமாகும்.
வாழிடம்
[தொகு]ஜெயகர் கடல் குதிரை இந்தியப் பெருங்கடலின் மேற்கு பகுதி, செங்கடம் மற்றும் அரேபிய கடல்களிலிருந்து பாக்கித்தானின் மத்திய கடற்கரை வரை காணப்படுகிறது.[1] இது கடற்பாசி படுக்கைகள் (காலோபிலா சிற். போன்றவை), பாசிகள், மென்மையான அடி மூலக்கூறுகள், கடற்பாசிகள் மற்றும் பாறை வாழ்விடங்களில் வாழ்கிறது.
விளக்கம்
[தொகு]ஜெயகர் கடல் குதிரை 14 சென்டிமீட்டர்கள் (5.5 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[3] இது 20 மீட்டர்கள் (66 அடி) ஆழமுள்ள நீர்ப்பகுதியில் வாழக்கூடியது. இது பொதுவாக 2–3 மீட்டர்கள் (6.6–9.8 அடி) அளவில் காணப்படுகிறது.[3] இது மற்ற கடல் குதிரைகளைப் போலவே சிறிய ஓட்டுமீன்களை உண்ணும். இந்த சிற்றினம் உள்பொரி முட்டையிடும் வகையினைச் சார்ந்தது. ஆண் கடற்குதிரைகள் குஞ்சு பொரிக்கும் பையில் முட்டைகளைச் சுமந்துகொண்டு அடைகாக்கின்றது.[1] பாலியல் முதிர்ச்சி 11 சென்டிமீட்டர்கள் (4.3 அங்) நீளம் இருக்கும்போது அடைகிறது.[3]
ஜெயகர் கடல் குதிரை விலங்கியல் பெயர் மற்றும் பொதுவான பெயர் இந்திய மருத்துவர், மொழியியலாளர் மற்றும் மீனியலாளர் மருத்துவர் ஆத்மாராம் சதாசிவ் "மஸ்கட்டி" ஜெயகர் (1844-1911) நினைவாக இடப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Kuo, T.-C.; Pollom, R. (2017). "Hippocampus jayakari". IUCN Red List of Threatened Species 2017: e.T10074A54145490. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T10074A54145490.en. https://www.iucnredlist.org/species/10074/54145490. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- 1 2 3 Lourie, S.A., A.C.J. Vincent and H.J. Hall, 1999. Seahorses: an identification guide to the world's species and their conservation. Project Seahorse, London. p.214
- ↑ "Biographical Etymology of Marine Organism Names. IJ". Hans G. Hansson. Retrieved 19 May 2018.