உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்கண்டி மாநிலம்

ஆள்கூறுகள்: 16°31′N 75°18′E / 16.517°N 75.300°E / 16.517; 75.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jamkhandi State
ಜಮಖಂಡಿ ಸಂಸ್ಥಾನ
பிரித்தானிய இந்தியாவில் மராட்டியப் பேரரசின் கீழிருந்த (1811 - 1818) மன்னர் அரசு பிரித்தானிய இந்தியா

1811–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஜம்கண்டி
Location of ஜம்கண்டி
இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியரரில் காட்டப்பட்டுள்ள ஜம்கண்டி மாநிலம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1811
 •  இந்திய ஒன்றியத்தில் இணைந்தது 1948
தற்காலத்தில் அங்கம் கருநாடகம், இந்தியா

ஜம்கண்டி மாநிலம் (Jamkhandi State) பிரித்தானிய இந்தியாவில் மராட்டியப் பேரரசின் கீழிருந்த சமஸ்தானங்களில் ஒன்றாகும்.[1] இது 1811 இல் நிறுவப்பட்டது. மேலும், இதன் தலைநகரம் ஜமகண்டியில் இருந்தது.[2] இது பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமையின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டது. மேலும் இது தெற்கு மராட்டிய நாட்டின் முன்னாள் மாநிலங்களில் ஒன்றாகும். இந்த சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி இன்றைய கருநாடகாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்தியாவின் ஐந்தாவது குடியரசு துணைத்தலைவராக 1974 முதல் 1979 வரை பதவியிலிருந்த பசப்பா தனப்பா ஜாட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர்.

வரலாறு

[தொகு]

ஜம்கண்டி மாநிலம் 1811 ஆம் ஆண்டில் கோபால்ராவ் பட்வர்த்தன் என்பவரால் நிறுவப்பட்டது.

ஜம்புகேசுவர் கோயிலின் பெயரிலிருந்து இம்மாநிலத்திற்கு இப்பெயர் பெறப்பட்டது. நாவல் (ஜம்புல்) காடுகளுக்குள் இருந்ததால் இக்கோயிலுக்கு இப்பெயர் வந்திருக்கலாம். இன்று, கோயில் வளாகத்தில் இருந்து ஒரு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.[3]

அண்டை நாடான தார்வாட் மாவட்டத்திலுள்ள குந்தோல் நகரம், 19 பிப்ரவரி 1948 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் வரை ஜம்கண்டி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

ஆட்சியாளர்கள்

[தொகு]

இந்த மாநிலத்தின் ஆட்சியாளர்கள் 'ராஜா' என்ற பட்டத்தை பெற்றிருந்தனர். ஜம்கண்டியின் மன்னர்கள் பட்வர்தன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Imperial Gazetteer of India, v. 14, p. 46.
  2. Jamkhandi (Princely State)
  3. Swami Vivekanand English Medium school and Nutan Vidyalaya Kannada Gandu Makkala Shale, ನೂತನ ವಿದ್ಯಾಲಯ ಕನ್ನಡ ಗಂಡು ಮಕ್ಕಳ ಶಾಲೆ

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்கண்டி_மாநிலம்&oldid=4137427" இலிருந்து மீள்விக்கப்பட்டது