பெல்காம் எல்லைப் பிணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர்ண சட்டமன்றக் கட்டிடம், பெல்காம்

பெலகாவி எல்லைப் பிணக்கு அல்லது பெல்காம் எல்லைப் பிணக்கு (Belagavi border dispute or Belgaon border dispute)[1] கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம், கர்நாடகா-மகாராட்டிரம் மாநில எல்லையில் உள்ளது. பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பெரும்பான்மை மக்கள் பேசுகின்றனர். 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் பம்பாய் மாகாணத்தின் கீழ் பெல்காம் மாவட்டம் இருந்தது.[2]

1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மராத்தி மொழி பெரும்பான்மையாக பேசும் பெல்காம் மாவட்டம், புதிதாக நிறுவப்பட்ட மைசூர் இராச்சியத்துடன் (தற்போது கர்நாடகா) இணைக்கப்பட்டது.[3][4]

மகாராட்டிரா அரசின் கோரிக்கையின் படி, இந்திய அரசு பெல்காம் மாவட்ட உரிமைப் பிணக்கு குறித்து விசாரணை நடத்த 5 சூன் 1960 அன்று நீதியரசர் மகாஜன் தலைமையில் மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் சார்பில் நான்கு உறுப்பினர் குழுவை நியமித்தது. இருப்பினும் பெல்காம் மாவட்ட உரிமை/எல்லைப் பிரச்சனை குறித்து ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை.[5]கர்நாடகா அரசு தற்போது பெல்காம் மாவட்டம் உள்ளது உள்ளபடி இருக்க வற்புறுத்தியது. மேலும் பெல்காம் பகுதிகள் கர்நாடகத்தின் பகுதி என நிலைநாட்டுவதற்கு கர்நாடக அரசு பெல்காம் நகரத்தில் சுவர்ண சட்டமன்றக் கட்டிடத்தை 11 அக்டோபர் 2012 அன்று நிறுவியது.[6]

மகாஜன் ஆணையம்[தொகு]

பெல்காம் எல்லைப் பிரச்சனைக்கு முடிவு காண இந்திய அரசு 25 அக்டோபர் 1966 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாஜன் தலைமையில்[7] ஆணையத்தை நிறுவியது. மகாஜன் ஆணையம், பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராட்டிராவுடனும், கன்னடம் பேசும் கிராமங்களை கர்நாடகாவுடன் இணைக்கலாம் என பரிந்துரை செய்தது. மேலும் பெல்காம் நகரம் மகாராட்டிரம் உரிமை கோருவதை ஆணையம் ஏற்கவில்லை.[8]

மகாராட்டிரா அரசு பெல்காம் உள்ளிட்ட மராத்தி மொழி பேசும் 814 கிராமங்களுக்கு உரிமை கோரியது. மேலும் மகாராட்டிரா மாநிலத்தில் கன்னடம் பேசும் 262 கிராமங்களை கர்நாடகாவுக்கு வழங்க விருப்பம் தெரிவித்தது. ஆனால் கர்நாடகா அரசு கன்னட மொழி பேசும் 516 கிராமங்களை மகாராட்டிர அரசிடமிருந்து கோரியது.[9]

மகாஜன் ஆணையத்தின் அறிக்கை[தொகு]

பெல்காம் நகரத்திற்கு மகாராட்டிரா அரசு உரிமை கோருவதற்கு ஆணையம் மறுத்தது.[9] ஆணயத்தின் கருத்துக்கள்:

மகாஜன் ஆணயத்தின் முக்கியப் பரிந்துரைகள்:

  1. பெல்காம் நகரம் தொடர்ந்து கர்நாடகாவில் இருக்க வேண்டு.
  2. சோலாப்பூர், அக்கல்கோட், ஜத்தா உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடகாவின் பகுதியாக இருத்தல் வேண்டும்
  3. நிப்பானி, கானாபூர் மற்றும் நந்தகாட்,உள்ளிட்ட 264 கிராமங்கள் மகாராட்டிரா மாநிலத்தின் பகுதியாக இருத்தல் வேண்டும்.
  4. காசர்கோடு (கேரளா) கர்நாடகாவின் பகுதியாக இருத்தல் வேண்டும்.[10]

மகாஜன் ஆணையத்தின் பரிந்துரைகள் மகாராட்டிரம் மற்றும் கேரள அரசுகள் ஏற்க மறுத்தன.

ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக மகாராட்டிரா அரசின் வாதங்கள்[தொகு]

1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மராத்தி மொழி பேசும் அதிகம் பேசப்படும் பகுதிகள் அடிப்படையில் பெல்காம் எல்லைப் பிணக்கை தீர்க்கக் கோரியது. (அடைப்புக் குறிக்குள் கன்னடம் பேசுபவர்கள் %)

  • பெல்காம் நகரம்: 60% (18.8%)
  • ஷாகாப்பூர்: 57.0% (33.2%)
  • பெல்காம் பாசறை: 33.6% (20.6%)
  • பெல்காம் புறநகரம்: 50.9% (21.8%)

மகாஜன் அறிக்கையில் மராததி மொழி அதிகம் பேசும் பெல்காம் நகரத்தைச் சுற்றி, அனைத்துப் பகுதிகளிலும் கன்னடம் மொழி அதிகம் பேசும் பகுதிகள் உள்ளது என சுட்டிக்காட்டியது. பெல்காம் பகுதியில் மராத்தி மொழி கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதாகவும், மகாஜன் ஆணயத்தின் பரிந்துரைகள் பெல்காம் எல்லைப் பிணக்கிற்கு இறுதியானது அல்ல மகாராட்டிரா அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.[11]

உச்ச நீதிமன்றத்தில்[தொகு]

பெல்காம் நகரம் தமக்குரியது என மகாராட்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் 17 சனவரி 2004 அன்று வழக்கு தொடுத்தது. அதற்கு கர்நாடக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பிணக்க்கை நாடாளுமன்றம் மட்டுமே தலையிட்டு தீர்வு காணமுடியுமே தவிர நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டது.[12]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karnataka-Maharashtra border dispute Explained: What is Belagavi border dispute between Karnataka and Maharashtra | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jan 28, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
  2. "States Reorganization Act 1956". Commonwealth Legal Information Institute. Archived from the original on 16 May 2008. பார்க்கப்பட்ட நாள் 1 July 2008.
  3. "DomainMarket.com, The world's best brand new brands". Archived from the original on 2012-05-12.
  4. Jaishankar Jayaramiah (21 November 2005). "Karnataka caught in 'language' web". The Financial Express இம் மூலத்தில் இருந்து 10 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310192251/http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=109230. 
  5. Sharma, Ravi (3 December 2005). "A troubled legacy". Frontline இம் மூலத்தில் இருந்து 1 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120301124537/http://www.flonnet.com/fl2225/stories/20051216008012500.htm. 
  6. "A new chapter begins today". The Hindu. 11 October 2012. http://www.thehindu.com/news/states/karnataka/a-new-chapter-begins-today/article3985269.ece?homepage=true. 
  7. Mehr Chand Mahajan
  8. "Singing the same old song again". Deccan Herald. 9 May 2006 இம் மூலத்தில் இருந்து 24 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070224123625/http://www.deccanherald.com/deccanherald/May92006/panorama165059200658.asp. 
  9. 9.0 9.1 "Tracing the History of Battle for Belgaum". The Times of India. 4 October 2006 இம் மூலத்தில் இருந்து 11 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070311073023/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQkcvMjAwNi8xMC8wNCNBcjAwNDAx&Mode=HTML&Locale=english-skin-custom. 
  10. "Mahajan recommends transfer of Kasargod" (in en-IN). The Hindu. 2017-10-06. https://www.thehindu.com/archives/mahajan-recommends-transfer-of-kasargod/article19803202.ece. "The Mahajan Commission is understood to have upheld Mysore's claims for the areas in Kerala and recommended the transfer of the entire Kasargod taluk in Kerala, minus eight villages lying south of the Chandragiri river to Mysore. Kasargod town also will go to Mysore" 
  11. "Marathi speakers once again vow to merge with Maharashtra" (in மராத்தி). Sakal. 27 October 2006. Archived from the original on 9 October 2007. பார்க்கப்பட்ட நாள் 27 October 2006.
  12. Maharashtra-Karnataka border dispute in court, Belagavi on edge