ஜப்பான் (2023 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பான்
இயக்கம்ராஜு முருகன்
தயாரிப்புஎஸ். ஆர். பிரபு
கதைராஜூ முருகன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புகார்த்திக் சிவகுமார்
அனு இம்மானுவேல்
ஒளிப்பதிவுரவி வர்மன்
படத்தொகுப்புபிலோமின் ராஜ்
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு10 நவம்பர் 2023 (2023-11-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜப்பான் (Japan) நவம்பர் 2023 இல் வெளிவந்த தமிழ் அதிரடி நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜு முருகன்; தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு (டிரீம் வாரியர் பிக்சர்சு நிறுவனம்). இத்திரைப்படத்தில் கார்த்திக் சிவகுமார், அனு இம்மானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் குறித்த அலுவல்பூர்வ அறிவிப்பு வெளியானது. நவம்பர் மாதம் படப்பிடிப்புத் துவங்கியது.[1] அதே மாதத்தில் திரைப்படத்திற்கான தலைப்பு "ஜப்பான்" என வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்; ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்; படத்தொகுப்பு பிலோமின் ராஜ். ஜப்பான் திரைப்படம் , நவம்பர் 10, 2023 அன்று தீபாவளி வாரத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கதை[தொகு]

ஒரு திருடனுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம் தான் "ஜப்பான்" படத்தின் அடிப்படை கதை. கோவையில் ஒரு மிகப்பெரிய நகைக்கடையில் ₹200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நகைக்கடையில் உள்துறை அமைச்சரின் குடும்பத்துக்கும் பங்கு இருப்பதால் திருடனை உடனடியாக கண்டறிய காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒருபக்கம் சுனில் வர்மா, மறுபக்கம் விஜய் மில்டன் தலைமையிலான காவல்துறைக் குழு நடத்தும் விசாரணையில் இது ஜப்பான் (கார்த்தி) செய்த சம்பவம் என தெரிய வருகிறது. இதனிடையே வாரி வழங்கும் வள்ளலாக இருக்கும் கார்த்திக்கு நடிகையான அனு இம்மானுவேல் மீது காதல் ஏற்படுகிறது. அவரைத் தேடிப் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் கார்த்தியை திட்டமிட்டு விஜய் மில்டன் கைதுசெய்ய நினைக்க அனு இம்மானுவலோடு அங்கிருந்து தப்பிக்கிறார் கார்த்தி. அப்படிச் செல்லும் வழியில் கார்த்தியுடன் ஒரு திட்டம் தீட்ட நினைக்கின்றார் சுனில் வர்மா. ஆனால் தான் இந்தத் திருட்டைச் செய்யவில்லை என்று கார்த்தி சொல்கின்றார் அப்படி என்றால் இவ்வளவு பெரிய திருட்டை செய்தது யார்? கார்த்தியை இதில் சிக்க வைக்க என்ன காரணம்? என்பதை பரபரக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறது "ஜப்பான்" படம்.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karthi's Japan with Raju Murugan goes on floors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 November 2022 இம் மூலத்தில் இருந்து 10 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230610222534/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/karthis-japan-with-raju-murugan-goes-on-floors/articleshow/95375982.cms?from=mdr. 
  2. "Japan' teaser: Karthi starrer promises a fun ride". The Times of India. 18 October 2023. Archived from the original on 19 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பான்_(2023_திரைப்படம்)&oldid=3898199" இலிருந்து மீள்விக்கப்பட்டது