அனு இம்மானுவேல்
அனு இம்மானுவேல் | |
---|---|
![]() ஒரு நிகழ்வில் அனு | |
பிறப்பு | அனு இம்மானுவேல் சிகாகோ, இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011, 2016-முதல் |
அனு இம்மானுவேல் (Anu Emmanuel) ஓர் இந்திய நடிகை ஆவார். மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனில் ஆகியோரின் மகளாக நடித்தார்.[1] அதன் பின்னர், ஆக்சன் ஹீரோ பிஜூ (2016) எனும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[2] நடிகர் நானி நடித்து வெளியான மஜ்னு (2016) திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் இயக்குநர் மிஷ்கினின் துப்பறிவாளன் (2017) திரைப்படத்தில் அறிமுகமானார். அடுத்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை (2019) திரைப்படத்திலும் நடித்தார். இரு படங்களும் வணிகரீதியாக வெற்றியை பெற்றன.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அனு இம்மானுவேல் அமெரிக்காவில் 28, மார்ச் 1997ம் ஆண்டு பிறந்தார். இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் தங்கச்சன் இம்மானுவேல் என்பவரின் மகள். டலாஸ் அருகிலுள்ள டெக்சஸ் மாகாணத்தின் கார்லாண்ட் நகரில் வளர்ந்தார். உயர்நிலை படிப்பை இந்தியாவில் பயின்ற அனு, அமெரிக்காவில் மேல்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்து[3], உளவியல் பிரிவில் இளங்கலை படிப்பை தேர்வு செய்தார். ஆனால், ஓராண்டு முடிவில் நடிப்பதற்காக இந்தியாவுக்கு திரும்பினார்.
தொழில்
[தொகு]உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது கலைத் துறையில் ஏதாவது ஒன்றைத் தொடர வேண்டும் என்று அனு முடிவெடுத்தார். உயர்நிலைப் பள்ளியில் அவரது முதல் வருடத்தில் துல்கர் சல்மானுடன் சார்லீ படத்தில் நடிக்க முதல் தேர்வாகியிருந்தார். ஆனால் பள்ளி இறுதி தேர்வுகள் காரணமாக அவர் மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்னர் மீண்டும் இந்தியாவிற்கு வந்த அனு, 2016-ம் ஆண்டு நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[4] [5]
அடுத்து நடிகர் கோபிசந்த் உடன் இணைந்து முன்னணி நடிகையாக ஆக்ஸிஜனில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்.[6] அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் நடிகர் நானி நடிக்கும் மஞ்சு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தனது நடிப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் அனைவராலும் பாராட்டப் பெற்றார் அனு. உடனடியாக பவன் கல்யாண் மற்றும் திரிவிக்ரம் கூட்டணியில் தயாரான அக்ஞ்யாதவாசி (2018) திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதில் மூலம் பெரிய உச்சத்தை அடைந்தார். அதன் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் நா பேரு சூர்யா (2018) வில் நடித்தார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் (2017) படத்தில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.[7]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2011 | ஸ்வப்ன சஞ்சாரி | அஸ்வதி | மலையாளம் | |
2016 | ஆக்சன் ஹீரோ பிஜு | பெனிடா | மலையாளம் | |
மஞ்சு | கிரண்மை | தெலுங்கு | தெலுங்கில் சிறந்த நடிகைக்கான தயாரிப்பாளர்கள் கில்ட் திரைப்பட விருது
தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதுகள் பரிந்துரைக்கப்பட்டன | |
2017 | கிட்டு உன்னாடு ஜாக்ரதா | ஜானகி | ||
துப்பறிவாளன் | மல்லிகா | தமிழ் | ||
ஆக்ஸிஜன் | கீதா | தெலுங்கு | ||
2018 | அக்ஞயாதவாசி | சூரியகாந்தம் | ||
நா பேரு சூர்யா | வர்ஷா | |||
சைலஜா ரெட்டி அல்லுடு | அனு ரெட்டி | |||
கீதா கோவிந்தம் | - | கௌரவத் தோற்றம் | ||
2019 | நம்ம வீட்டு பிள்ளை | மாங்கனி | தமிழ் | |
2021 | அல்லுடு அதுர்ஸ் | வசுந்தரா | தெலுங்கு | |
மஹா சமுத்திரம் | ஸ்மிதா | [8] | ||
2022 | ஊர்வசிவோ ராக்ஷசிவோ | சிந்துஜா | [9] | |
2023 | ராவணசுரா | கீர்த்தனா | [10] | |
ஜப்பான் | சஞ்சு குட்டி | தமிழ் | [11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SHREEJAYA NAIR (17 September 2015). "Anu Emmanuel back after study break, to be Nivin's pair".
- ↑ "Anu Emmanuel joins Action Hero Biju". 20 September 2015. Archived from the original on 8 February 2016.
- ↑ Akhila Menon (21 January 2016). "WHAT! Anu Emmanuel Rejected Charlie?". filmbeat.
- ↑ Shilpa Nair Anand (28 January 2016). "Nivin is back in action".
- ↑ India.com Staff (30 January 2016). "Action Hero Biju Official Trailer: Nivin Pauly & Anu Emmanuel starrer looks fresh and promising!".
- ↑ "சர்வே ஸ்மைல்ஸ்". survey-smiles.com. பார்க்கப்பட்ட நாள் 2025-02-12.
- ↑ "தற்பொழுது".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Features, C. E. (2020-10-01). "Anu Emmanuel joins Maha Samudram". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-12.
- ↑ Staff, T. N. M. (2021-05-31). "Allu Sirish and Anu Emmanuel's romantic drama titled 'Prema Kadanta'". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-12.
- ↑ Today, Telangana (2022-01-19). "Ravi Teja's 'Ravanasura' begins filming". Telangana Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-12.
- ↑ IANS (2022-11-08). "Karthi's 25th Film, Raju Murugan's 'Japan', Goes On The Floors With Puja". Outlook India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-02-12.