நானி
Appearance
நானி | |
---|---|
பிறப்பு | நவீன் பாபு காண்ட பெப்ரவரி 24, 1984 ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–இப்போது |
நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1] அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[2] பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.[3]
தனிப்பட்ட வாழ்வு
[தொகு]நானி ஐதராபாக்கத்தில் பிறந்து வளர்ந்தார். ஆகத்து 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றது.[4]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | அட்டா சம்மா | தெலுங்கு | |
2009 | இரைடு | தெலுங்கு | |
2009 | சினேகிட்டுட | தெலுங்கு | |
2010 | பீம்லி கபடி சட்டு | தெலுங்கு | |
2011 | அலா மொதலைந்தி | தெலுங்கு | |
2011 | வெப்பம் | தமிழ் | சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள் |
2011 | பில்ல சமீந்தார் | தெலுங்கு | |
2012 | ஈகா | தெலுங்கு | |
2012 | நான் ஈ | தமிழ் | |
2012 | எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு | தெலுங்கு | |
2012 | நீ தானே என் பொன்வசந்தம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2014 | பைசா | தெலுங்கு | |
2014 | சண்டா பய் கப்பிராசு | தெலுங்கு | படப்பிடிப்பில் |
2014 | ஆஹா கல்யாணம் | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நானி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
- ↑ "நானி சுயவிவரம் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-08-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
- ↑ அட்டா சம்மா-நகைச்சுவைப் பொழுதுபோக்கான இரண்டரை மணித்தியாலங்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ நானி திருமண நிச்சயதார்த்தம்
- ↑ நானி (6) (ஆங்கில மொழியில்)