ஜட்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜட்கா, அல்லது ஜடகா ( Jhatka, or Jhataka) என்பது சீக்கிய சமயத்தவரால் வாள் அல்லது கோடரியால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியாகும். இதில் ஒரே வெட்டில் விலங்கு கொல்லப்படுவதால் அந்த விலங்குக்கு வலி தெரிவதற்கு முன்பே இறந்துவிடும். இந்த வகையில் கொல்லப்படும் விலங்கின் இறைச்சியை பெரும்பாலான சீக்கியர்களும், இறைச்சி உட்கொள்ளும் பௌத்தர்களும் விரும்புகின்றனர். மேலும் இந்த முறையில் கசாப்பு செய்வதற்காக விலங்குகளை கொல்வதற்கு முன் அந்த விலங்கு பயப்படவோ அசையவோ கூடாது.

சொற்பிறப்பியல்[தொகு]

ஜட்கா ( பஞ்சாபி: ਝਟਕਾ , இந்தி: झटका , உருது جھٹکا ) என்ற சொல் ஜட்டிதி ( சமக்கிருதம்: झटिति ) என்ற சொல்லில் இருந்து அதாவது "உடனடியாக, விரைவாக, ஒரே நேரத்தில்" என்பது பொருளாகும். [1] [2]

சீக்கிய சமயத்தில் முக்கியத்துவம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கல்சா பந்த்தை முறைப்படுத்துவதற்காக 1699 இல் ஆனந்த்பூரில் குரு கோவிந்த் சிங் நடத்திய ஜாட்கா கொலையின் சித்தரிப்பு

அனைத்து சீக்கியர்களும் இந்த பாணியில் கொல்லப்படும் இறைச்சியை உண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றாலும், இவ்வாறான இறைச்சியையே உண்ணுமாறு பத்து சீக்கிய குருக்களால் வலியுறுத்தபபட்டதாக பெரும்பாலான சீக்கியர்களுக்கு நன்கு அறிவுறுத்தபடுகிறது:

சீக்கிய பாரம்பரியத்தின் படி, ஒரே வெட்டில் ஆயுதத்தால் கொன்று பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது. குரு கோவிந்த் சிங் இந்த அம்சத்தைப் பற்றி ஒரு தீவிரமான பார்வையைக் கொண்டிருந்தார். எனவே, இறைச்சியை உணவாக உண்பதை அனுமதித்த அவர், இந்த பரிகாரத்திற்கு பலியிடுதல் என்ற கோட்பாட்டை மறுத்தார். அதன்படி, இறைச்சியை தங்கள் உணவின் ஒரு பகுதியாக கொள்ள ஆர்வமுள்ள சீக்கியர்களுக்கு ஜாட்கா இறைச்சியை கட்டாயமாக்கினார்.

—எச்.எஸ். சின்கா, சீக்கியம், ஒரு முழுமையான அறிமுகம்[3][4][5]

அதிகாரப்பூர்வ கல்சா நடத்தை விதிகள் மற்றும் சீக்கிய ரெஹாத் மரியதாவில் கூறப்பட்டுள்ளபடி, யூதர்கள் அனுசரிக்கும் கஷ்ருத் இறைச்சி, முசுலிம்கள் அனுசரிக்கும் ஹலால் இறைச்சி போன்றவற்றை குத்தா இறைச்சி என்ற பெயரில் சீக்கியத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் சீக்கியர்கள் ஜாட்கா வகை இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். [6]

ஜட்கா கர்ணா அல்லது ஜாட்கவுண்ட் என்பது விலங்கின் தலையை எந்த ஒரு ஆயுதத்தாலும் ஒரே வெட்டில் வெட்டிக் கொல்வதைக் குறிக்கிறது. இவ்வாறு ஒரு விலங்கைக் கொல்லுவது என்பது அதற்கு குறைந்தபட்ச துன்பத்தையே ஏற்படுத்தும் என்பதாகும். [2]

பிரித்தானிய இந்தியாவின் போது, சீக்கியர்கள் ஜாட்கா வழியில் விலங்குகளைக் கொல்வதற்கான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தத் தொடங்கினர். சிறைகளில் ஜட்கா இறைச்சி அனுமதிக்கப்படாதபோது, அகாலி இயக்கத்தில் சீக்கியர்கள் தங்கள் இந்த உரிமையைப் பெற வன்முறைகளையும் போராட்டங்களையும் நாடினர். 1942 இல் பஞ்சாபில் அகாலிகளுக்கும் முஸ்லீம் யூனியனிஸ்ட் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையில் சீக்கியர்கள் ஜாட்கா இறைச்சியைத் தொடர வேண்டும் என்பதும் இருந்தது.

ஹஸூர் சாஹிப் நாந்தேட் மற்றும் பல சீக்கிய குருத்வாராக்களில் ஓல்லா மொகல்லா மற்றும் வைசாக்கி உள்ளிட்ட சீக்கிய சமயப் பண்டிகைகளில், குருத்வாராவுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஜட்கா இறைச்சி "மகாபிரசாதமாக" வழங்கப்படுகிறது. [7] சீக்கிய குருத்வாராக்களில் லாக்டோ-சைவ லங்கர் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நம்பும் நவீன சீக்கியப் பிரிவுகளால் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jhatiti, Jhaṭiti: 10 definitions" (in ஆங்கிலம்). 24 March 2019. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
  2. 2.0 2.1 Food, Feasts, and Faith: An Encyclopedia of Food Culture in World Religions. https://books.google.com/books?id=P-FqDgAAQBAJ. , Quote: "Jhatka, which comes from the Sanskrit word jhatiti meaning "at once", is a method of slaughter in which a single rapid jerk or blow to the head is believed to produce the least amount of suffering for the animal. (...) Unlike in Islam, there is no religious ritual that accompanies the killing."
  3. HS Singha (2009), Sikhism: A Complete Introduction, Hemkunt Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170102458, pages 81-82
  4. Skoda, Uwe; Lettmann, Birgit (October 30, 2017). India and Its Visual Cultures: Community, Class and Gender in a Symbolic Landscape. SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789386446695. https://books.google.com/books?id=6xtBDwAAQBAJ&pg=PT185. 
  5. Chandar, Y. Udaya (2020-02-25) (in en). The Strange Compatriots for Over a Thousand Years. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-64760-859-0. https://books.google.com/books?id=sJLSDwAAQBAJ&q=jhatka%20hindus&pg=PT342. 
  6. Singh, I. J., Sikhs and Sikhism பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-058-3 "And one Semitic practice clearly rejected in the Sikh code of conduct is eating flesh of an animal cooked in ritualistic manner; this would mean kosher and halal meat. The reason again does not lie in religious tenet but in the view that killing an animal with a prayer is not going to ennoble the flesh. No ritual, whoever conducts it, is going to do any good either to the animal or to the diner. Let man do what he must to assuage his hunger. If what he gets, he puts to good use and shares with the needy, then it is well used and well spent, otherwise not."
  7. 7.0 7.1 "The most special occasion of the Chhauni is the festival of Diwali which is celebrated for ten days. This is the only Sikh shrine at Amritsar where Maha Prasad (meat) is served on special occasions in Langar", The Sikh review, Volume 35, Issue 409 - Volume 36, Issue 420, Sikh Cultural Centre, 1988
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜட்கா&oldid=3849947" இலிருந்து மீள்விக்கப்பட்டது