சௌபாதி
சௌபாதி (Chhaupadi) (நேபாளி: छाउपडी) என்பது மாதவிடாய் தடையின் ஒரு வடிவமாகும். இது மாதவிடாய் காலத்தில் பெண்களும், சிறுமிகளும் சாதாரண குடும்ப நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்கிறது. ஏனெனில் அவர்கள் "தூய்மையற்றவர்கள்" என்று கருதப்படுகிறார்கள். சௌபாதி முக்கியமாக நேபாளத்தின் மேற்கு பகுதியில் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் நகரவாசிகளுக்கும் இது பொருந்தும்.
மாதவிடாயின் போது, பெண்கள் வீட்டிலிருப்பது தடைசெய்யப்பட்டு, ஒரு கால்நடை கொட்டகையில் (முக்கியமாக நாட்டின் மேற்குப் பகுதியில்) அல்லது மாதவிடாய் குடிசை என்று அழைக்கப்படும் ஒரு தற்காலிக குடியிருப்பில், அவர்களின் மாதவிடாய் நாட்களில் வாழ நிர்ப்பந்தப் படுத்தப்படுகிறார்கள். நேபாளத்தில் குழந்தை பிறப்பும் இதே போன்ற சிறைவாசத்திற்கு வழிவகுக்கிறது. மாதவிடாயின் போது, பெண்களும், சிறுமிகளும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்தும், அவர்களின் சமூகங்களுடன் தொடர்புகொள்வதிலிருந்தும் தடை விதிக்கப்படுகிறது.
தோற்றம்
[தொகு]மாதவிடாய் பெண்களை தற்காலிகமாக தூய்மையற்றவர்களாக ஆக்குகிறது என்ற மூடநம்பிக்கையிலிருந்து சௌபாதி பழக்கம் உருவாகிறது. இந்த மூடநம்பிக்கை இந்திரன் ஒரு சாபத்தை விநியோகிக்கும் வழிமுறையாக மாதவிடாயை உருவாக்கினார் என்ற கட்டுக்கதையில் இருந்து எழுந்தது.[1] மாதவிடாய் வந்த பெண் மரத்தைத் தொட்டால், அது மீண்டும் பலன் தராது என்று கருதப்படுகிறது; அவள் பால் குடித்தால், மாடு இனி பால் கொடுக்காது; அவள் ஒரு புத்தகத்தைப் படித்தால், கல்வியின் தெய்வமான சரசுவதி கோபப்படுவாள்; அவள் ஒரு மனிதனைத் தொட்டால், அவன் நோய்வாய்ப்படுவான் போன்றவை இந்த நம்பிக்கையில் அடங்கும்.
இந்த நடைமுறை கிராமப்புறங்களில் முதன்மையாக மேற்கு நேபாளத்தில் தொடர்கிறது. இது ததேல்துரா, பைத்தடி, தார்ச்சுலா போன்ற மாவட்டங்களில் 'இச்சு' அல்லது 'பகிர்ஹுனு' என்றும், அச்சாம் மாவட்டத்தில் 'சௌபாதி' என்றும், பஜாங் மாவட்டத்தில் 'சௌகுல்லா' அல்லது 'சௌகுதி' என்றும் அழைக்கப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]ஒரு இளம் பெண்ணின் முதல் மாதவிடாய் சுழற்சியுடன் இந்த பாரம்பரியம் தொடங்குகிறது. இந்த நிகழ்வின் போது அவள் பதினான்கு நாட்கள் வரை கொட்டகையில் இருப்பாள்; அதன்பிறகுமாதவிடாய் நிற்கும் வரை ஒவ்வொரு மாதாந்திர காலத்தையும் அவள் கொட்டகையில் செலவிட வேண்டும். கூடுதலாக, புதிதாகப் பிறந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இரண்டு வாரங்கள் வரை கொட்டகையில் இருக்க வேண்டும்.[3]
சௌபாதியில் சமூகத் தனிமை இருந்தபோதிலும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெரும்பாலும் வயல்களில் வேலை செய்ய வேண்டும்.[4]
உடல்நலமும் பாதுகாப்பு அபாயங்களும்
[தொகு]சௌபாதியின் போது பெண்கள் பல ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகிறார்கள். குடிசைகள் பெரும்பாலும் மோசமாக கட்டப்பட்டிருக்கும். மேலும், வெப்பம் அல்லது காற்றோட்டம் இல்லாதவாரும் கட்டப்பட்டிருக்கும். இந்த சமயத்தில் பெண்களுக்கு நுரையீரல் அழற்சி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் பாம்புகளாலும், பிற விலங்குகளின் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். குளிர்காலத்தில் ஒரு பெண் சூடாக இருக்க குடிசையில் நெருப்பை மூட்டத் தொடங்கினால் மூச்சுத்திணறல் ஆபத்து அதிகம் ஏற்படும். இந்த சமயங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளனர்.[5] [6] கூடுதலாக, ஒரு ஆய்வு நேபாளத்தின் பார்டியா, கைலாலி மாகாணங்களில் 12-49 வயதுடைய பெண்களில் சௌபாதி பழக்கம் சிறுநீர் கழித்தலில் சிக்கல், பிறப்புறுப்பு அரிப்பு போன்ற இனப்பெருக்க ஆரோக்கிய பிரச்சனைகளுடன் கணிசமாக தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.[7]
சௌபாதிக்கு எதிரான பொதுமக்களின் நடவடிக்கை
[தொகு]சமூக மற்றும் நிறுவன நடவடிக்கைகள் இந்த நடைமுறையை எதிர்க்கின்றன. 2019 சனவரியில், உள்ளூர் அதிகாரிகளிடம் பஜுராவில் உள்ள சௌபாதிடி குடிசைகளை அழிக்கக் கோரின. நகராட்சியில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு இளம் மகன்கள் குடிசையில் இறந்தனர். இதன் விளைவாக காவல்துறை உதவியுடன் 60 கொட்டகைகள் அகற்றப்பட்டன.[8]
சௌபாதி 2005இல் நேபாளத்தின் உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. ஆனாலும் பாரம்பரியம் மெதுவாகவே மாறிக்கொண்டுள்ளது.[9] 2017ஆம் ஆண்டில், மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை அல்லது 3,000 நேபாள ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத்தை நேபாள அரசு நிறைவேற்றியது. இருப்பினும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த ஐந்து மாதங்களில் (ஆகத்து 2018 இல்), நடைமுறையை அமல்படுத்துபவர்கள் மீது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.[10] [11] 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாட்டின் மேற்கில் உள்ள மாவட்ட அரசாங்கங்கள் குடிமக்களுக்கு மாநில ஆதரவு சேவைகளை மறுக்கத் தொடங்கின. இந்த நடைமுறையைக் குறைக்கும் முயற்சியில் சௌபாதி நடைமுறையை இன்னும் செயல்படுத்தி வருகின்றன.[12]
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gupta, Gargi (Dec 6, 2015). "Menstruation and the religious taboos for women". dna. Archived from the original on August 1, 2018. பார்க்கப்பட்ட நாள் July 31, 2018.
- ↑ United Nations Resident and Humanitarian Coordinator’s Office (April 1, 2011). "FIELD BULLETIN: Chaupadi In The Far-West" (PDF). United Nations Office of Human Rights. Archived from the original (PDF) on August 3, 2018. பார்க்கப்பட்ட நாள் July 31, 2018.
- ↑ "Assessment Study on Chhaupadi in Nepal: Towards a Harm Reduction Strategy" (PDF). Nepal Health Sector Programme. Archived from the original (PDF) on December 22, 2018. பார்க்கப்பட்ட நாள் August 1, 2018.
- ↑ "Where a Taboo Is Leading to the Deaths of Young Girls". https://www.nytimes.com/2018/06/19/world/asia/nepal-women-menstruation-period.html.
- ↑ Shanti Kadariya, Arja R Aro (June 2015). "Chhaupadi practice in Nepal – analysis of ethical aspects". Medicolegal and Bioethics 53: 53–58. doi:10.2147/MB.S83825. https://www.researchgate.net/publication/282447220. பார்த்த நாள்: 2018-08-01.
- ↑ "The Risky Lives of Women Sent Into Exile—For Menstruating" பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம், National Geographic, March 10, 2017.
- ↑ Ranabhat, Chhabi; Kim, Chun-Bae; Choi, Eun Hee; Aryal, Anu; Park, Myung Bae; Doh, Young Ah (2015-08-27). "Chhaupadi Culture and Reproductive Health of Women in Nepal". Asia-Pacific Journal of Public Health 27 (7): 785–795. doi:10.1177/1010539515602743. பன்னாட்டுத் தர தொடர் எண்:1010-5395. பப்மெட்:26316503.
- ↑ "Locals tear down Chhaupadi huts amid wide concern over deaths in sheds". The Himalayan Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-17. Archived from the original on 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
- ↑ "Nepal: Emerging from menstrual quarantine". Integrated Regional Information Networks. 3 August 2011. Archived from the original on 29 November 2014. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
- ↑ roshan sedhai, associated press (2012-09-20). "Nepal strengthens laws against dowry, menstrual exile - ABC News". Abcnews.go.com. Archived from the original on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
- ↑ "Criminal Code 'ineffective' to end Chhaupadi practice". kathmandupost.ekantipur.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
- ↑ Adhikari, Rojita (2019-01-14). "Destroy 'period huts' or forget state support: Nepal moves to end practice" (in en-GB). The Guardian. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-3077. https://www.theguardian.com/global-development/2019/jan/14/destroy-period-huts-or-forget-state-support-nepal-moves-to-end-practice-chhaupadi.