சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
650-51-1 | |
ChemSpider | 12073 |
EC number | 211-479-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23681045 |
வே.ந.வி.ப எண் | AJ9100000 |
| |
UNII | 2N76A3BRJ0 |
பண்புகள் | |
C2Cl3NaO2 | |
வாய்ப்பாட்டு எடை | 185.36 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | ~1.5 கி/மிலி−1 |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
55 கிராம் / 100 மி.லி | |
கரைதிறன் | மெத்தனால் மற்றும் எத்தனால் கரைப்பான்களில் கரையும், அசிட்டோனில் சிறிதளவு கரையும், ஈதர் மற்றும் நீரகக்கரிமம் கரைப்பான்களில் கரையாது |
காடித்தன்மை எண் (pKa) | 0.7 (இணை அமிலம்) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H335, H410 | |
P261, P271, P273, P304+340, P312, P391, P403+233, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Autoignition
temperature |
தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Sodium trifluoroacetate |
ஏனைய நேர் மின்அயனிகள் | முக்குளோரோ அசிட்டிக் அமிலம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு (Sodium trichloroacetate) என்பது C2Cl3NaO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் டிரைகுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. CCl3CO2Na என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். ஒரு குரோமோசோமில் மரபணுக்களைக் கண்டறியும் செயல்முறையில் படியெடுக்கும்போது உணர்திறன் மற்றும் துல்லியத்தை அதிகரிக்க இச்சேர்மம் பயன்படுகிறது.[1] முன்னதாக சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு 1950 ஆம் ஆண்டுகளில் களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கட்டுப்பாட்டாளர்கள் அதை 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் சந்தையில் இருந்து அகற்றினர். [2][3][4]
தயாரிப்பு
[தொகு]முக்குளோரோ அசிட்டிக் அமிலத்துடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
- CCl3CO2H + NaOH -> CCl3CO2Na + H2O
வினைகள்
[தொகு]காரத்தன்மை
[தொகு]சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு சோடியம் அசிட்டேட்டை விட பலவீனமான ஒரு காரமாகும். ஏனெனில் முக்குளோரோமெத்தில் குழுவின் எலக்ட்ரான்-திரும்புதல் இயல்பு இதற்கு காரணமாகும். இதேபோல சோடியம் முப்புளோரோ அசிட்டேட்டும் பலவீனமான ஒரு காரணமாகும். இருப்பினும், பொருத்தமான வலுவான அமிலங்களின் முன்னிலையில் இது எளிதில் புரோட்டானேற்றம் அடையும்.
- CCl3CO2- + H2SO4 -> CCl3CO2H + HSO4-
எதிர்மின் அயனி முன்னோடி
[தொகு]சோடியம் முக்குளோரோ அசிட்டேட்டு வினையாக்கி முக்குளோரோமெத்தில் குழுவை மற்ற மூலக்கூறுகளில் அறிமுகப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். கார்பாக்சில் குழு நீக்கத்தின் போது இது முக்குளோரோமெத்தில் அயனியை உருவாக்குகிறது. முக்குளோரோமெத்தில் அயனி ஆல்டிகைடுகள், கார்பாக்சிலிக் அமில நீரிலிகள்,[5] கீட்டோன்கள் (இயோசிக்கு-ரீவ் வினைக்கு முன்னோடியாக அமைவது) மற்றும் அசைல் ஆலைடுகள் போன்ற பல்வேறு கார்பனைல் செயல்பாட்டுக் குழுக்களைத் தாக்குவதற்குப் போதுமான வலுவான அணுக்கருகவரி ஆகும்
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murray, M. G. (1986). "Use of sodium trichloroacetate and mung bean nuclease to increase sensitivity and precision during transcript mapping". Analytical Biochemistry 158 (1): 165–170. doi:10.1016/0003-2697(86)90605-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2697. பப்மெட்:2432801.
- ↑ G. S. Rai and C. L. Hamner Persistence of Sodium Trichloroacetate in Different Soil Types Weeds 2(4) Oct. 1953: 271-279
- ↑ OECD Trichloroacetic Acid CAS N°: 76-03-9 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Accessed June 20, 2014
- ↑ EPA December 1991. trichloroacetic acid (TCA) EPA Cancellation 12/91 Accessed June 20, 2014
- ↑ Winston, Anthony; Bederka, John P. M.; Isner, William G.; Juliano, Peter C.; Sharp, John C. (1965). "Trichloromethylation of Anhydrides. Ring—Chain Tautomerism". J. Org. Chem. 30 (8): 2784–2787. doi:10.1021/jo01019a068.