முக்குளோரோ அசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முக்குளோரோ அசிட்டிக் அமிலம்
Trichloroacetic acid
Trichloroacetic acid structure.svg
Trichloroacetic-acid-3D-vdW.png
Trichloroacetic-acid-elpot.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
76-03-9
ChEMBL ChEMBL14053
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C11150 Yes check.svgY
பப்கெம் 6421
வே.ந.வி.ப எண் AJ7875000
பண்புகள்
C2HCl3O2
வாய்ப்பாட்டு எடை 163.38 g·mol−1
தோற்றம் நிறமற்றும் வெண்மையாகவும், படிகத் திண்மமாக
மணம் தெளிவான காரச்சுவை [1]
அடர்த்தி 1.63 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 196 முதல் 197 °C (385 முதல் 387 °F; 469 முதல் 470 K)[2]
0.1 பகுதிகளில் கரையும்[2]
ஆவியமுக்கம் 1 மி.மீ பாதரசம் (51.1°செ)[1]
காடித்தன்மை எண் (pKa) 0.66[3]
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 3.23 D
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு அரிக்கும் (C)
அபாயம்
சுற்றுச்சூழலுக்கு (N)
R-சொற்றொடர்கள் R35, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S36/37/39,
S45, S60, S61
Lethal dose or concentration (LD, LC):
5000 மி.கி/கி.கி எலிகளுக்கு வாய்வழி[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 பகுதி/மில்லியன் (7 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

முக்குளோரோ அசிட்டிக் அமிலம் (Trichloroacetic acid ) C2HCl3O2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம், டிரைகுளோரோ எத்தனாயிக் அமிலம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் அசிட்டிக் அமிலத்துடன் ஒப்பிடத்தக்க ஓர் அமிலமாக உள்ளது. அசிட்டிக் அமிலத்தின் மெத்தில் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தில் மூன்று குளோரின் அணுக்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வமிலத்தின் உப்புகளும், எசுத்தர்களும் முக்குளோரோ அசிட்டேட்டுகள் என அழைக்கப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

பொருத்தமான ஒரு வினையூக்கியின் முன்னிலையில் அசிட்டிக் அமிலத்துடன் குளோரின் சேர்த்து வினைபுரிய வைப்பதால் முக்குளோரோ அசிட்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

CH3COOH + 3Cl2 → CCl3COOH +3HCl

பயன்கள்[தொகு]

முக்குளோரோ அசிட்டிக் அமிலம் உயிர் வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. புரதங்கள், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்ற பெருமூலக்கூறுகளைத் வீழபடிவாக்க இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. முக்குளோரோ அசிட்டிக் அமிலம், இருகுளோரோ அசிட்டிக் அமிலம் ஆகிய இரண்டும் அழகியல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (பச்சை குத்திய அடையாளத்தை நீக்குதல் மற்றும் வேதி நீக்கல் போன்றவை) முகப்பருக்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்கள் போன்ற சரும உபாதைகளை நீக்கும் சிகிச்சையில் மேற்புற மருந்துப் பூச்சாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண செல்களையும் இவை அழித்துவிட இயலும் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். மகப்பேறு காலத்திலும் மேற்கண்ட காரணத்திற்காக பயன்படுத்துவது பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது[4][5].

முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தின் சோடிய உப்புகள் களைக்கொள்ளிகளாக 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கி பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1980 களின் பிற்பகுதி மற்றும் 1990 களின் முற்பகுதியில் இவற்ரின் பயன்பாடு வழக்கொழிந்தது[6][7][8][9][10].

வரலாறு[தொகு]

இயீன்-பாப்டிசுடு தூமாசு 1839 ஆம் ஆண்டு முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தைக் கண்டறிந்தார். இக்காலத்தில் தொடக்கநிலையில் இருந்த கரிம வேதியியல் தனி உறுப்புகள் மற்றும் இணைதிறன்கள்[11] தொடர்பான கோட்பாடுகளுக்கு முக்குளோரோ அசிட்டிக் அமிலத்தின் கண்டுபிடிப்பு ஒரு உதாரணமாக விளங்கியது. இயான்சு இயாக்கோப்பு பெர்சிலியசின் நம்பிக்கைகளுக்கு மாற்றுக் கருத்தாக அமைந்து தூமாசு மற்றும் பெர்சிலியசு இடையே ஒரு மிகநீண்ட சர்ச்சையை தோற்றுவித்தது[12]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]