சோடச உபசாரம்
சோடச உபசாரம் என்பது இந்து கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை சோடச உபசார பூஜை, சோடச தீபாராதனை, சோடச தீபாராதனை உபசாரம் எனவும் அழைப்பர். தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் என்பவர் இப்பூஜைக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் உருவாக்கியவராக அறியப்பெறுகிறார்[1].
இந்த உபசார முறைகள் பண்டைய இந்தியாவில் அரசர்களுக்கு செய்யப்பட்டவையாகும். பின்பு அவைகள் இறைவனுக்கு செய்யப்படுபவைகளாக மாற்றப்பட்டன[2].
தயாராகுதல்
[தொகு]சோடச உபசாரங்களை தொடங்கும் முன்பு பூசைக்கான சில சுத்திகளைச் செய்ய வேண்டும்.
- ஆத்ம சுத்தி - பூசை செய்பவரின் உடலை சுத்தப்படுத்தும் பணி
- ஸ்தான சுத்தி - கருவறையை சுத்தப்படுத்தும் பணி
- திரவிய சுத்தி - பூசை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பணி
- மந்திர சுத்தி - பூசைக்குறிய மூர்த்தியின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் பணி
- லிங்க சுத்தி - விக்கிரகத்தை சுத்தப்படும் பணி
இந்த சுத்திமுறைகளை முடித்த பிறகே சோடச உபகார பூஜையைத் தொடங்க வேண்டும்.
சோட உபசார பட்டியல்
[தொகு]- ஆவாகனம்
- தாபனம்
- சந்நிதானம்
- சந்நிரோதனம்
- அவகுண்டவம்
- தேனுமுத்திரை
- பாத்தியம்
- அசமனீயம்
- அருக்கியம்
- புஷ்பதானம்
- தூபம்
- தீபம்
- நைவேத்தியம்
- பாணீயம்
- செபசமர்ப்பணம்
- ஆராத்திரிகை
சோடச உபசார தீபங்கள்
[தொகு]- தூபம்
- ஏகதீபம் (உருக்களி)
- அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம்)
- புஷ்ப தீபம் - மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு )
- நாக தீபம்,
- விருஷப தீபம் (நந்தி தீபம்)
- புருஷாம்ருக தீபம்
- சூல தீபம்
- கூர்ம (ஆமை) தீபம்
- கஜ (யானை) தீபம்
- ஸிம்ஹ தீபம்
- வ்யாக்ர (புலி) தீபம்
- கொடி தீபம்
- மயூர தீபம்
- பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம்
- நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரங்களுக்காக 27 திரிகள் இடக்கூடிய தீபம்.
- மேரு தீபம் - மேரு மலை போன்ற தோற்றத்துடன் காணப்படுவது
சோடச பொருள்களின் பட்டியல்
[தொகு]
- கண்ணாடி,
- குடை,
- ஆலவட்டம்,
- சாமரம்,
- விசிறி,
- கொடி
இவற்றில் கண்ணாடி, குடை, ஆலவட்டம், விசிறி, கொடி ஆகியவை பித்தளையால் செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. சாமரங்கள் வெண்பட்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
- குடை
- ஸ்தாபனம்
- பாத்யம் கொடுத்தல்
- ஆசனமளித்தல்
- அர்க்கியம்
- அபிஷேகம் வஸ்திரம்
- சந்தனம்
- புஷ்பாஞ்சலி
- தூயதீபம்
- நைவேத்தியம்
- பலி போடுதல்
- ஹோமம்
- ஸ்ரீபலி
- கேயம் வாத்தியம்
- நர்த்தனம்
- உத்வாஸனம்
இலக்கியத்தில்
[தொகு]திருமுறை காண்டல் புராணத்தில்,
- நடராஜப் பெருமானுக்கு சோடச உபசாரம் [3]
இவற்றையும் காண்க
[தொகு]பூசைக் கிரியைகள் பஞ்சோபசாரம் தசோபசாரம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&format=print&edition_id=20030302 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் பரத நாட்டியம் - சில குறிப்புகள் - வைஷாலி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-05-10.
- ↑ http://shaivam.weebly.com/29803007299230092990300929933016296529953021.html