உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சை நால்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை நால்வர் வரிசை
தஞ்சை நால்வர் வரிசை

தஞ்சை நால்வர் (Thanjavur Quartet) என்பவர்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழ்ந்த நான்கு சகோதரர்கள் ஆவர். தஞ்சாவூர் சுப்பராய நட்டுவனார் பரமானந்தம் அம்மையார் தம்பதியருக்கு 1802 ஆம் ஆண்டில் சின்னையாவும், 1804 ஆம் ஆண்டில் பொன்னையாவும், 1808 ஆம் ஆண்டில் சிவானந்தமும், 1810 ஆம் ஆண்டில் வடிவேலுவும் மகன்களாகப் பிறந்தனர்.[1] இவர்கள் நால்வரும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோச்சியின் அரசவையில் பணியாற்றினார்கள். இந்தியாவின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியத்திற்கும், கர்நாடக இசையின் வளர்ச்சிக்கும் இவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.[2] [3]

தஞ்சை நால்வர்

[தொகு]

வரலாறு

[தொகு]

தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடிக்கு அருகிலுள்ள செங்கணார் கோயில் என்ற கிராமத்தில் வேளாளர் குடியில் பண்முறை ஓதுபவர்களாகவும், சிவத்தொண்டு புரிபவர்களாகவும் தஞ்சை நால்வரின் மூதாதையர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை அறியவில்லை. திருநெல்வேலி இவர்களின் பூர்வீக இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பெரிய கோயில் ஓவியத்தில் தஞ்சை நால்வர்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/2009/Dec/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-124875.html. பார்த்த நாள்: 19 February 2025. 
  2. Quartet, Tanjore (1980). "தஞ்சை நால்வர் நாட்டிய இசைக் கருவூலம்: பொன்னையா மணிமாலை : பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய மேதைகளின் படைப்புகள், அலாரிப்பு ஜதிஸ்வரம், சப்தம், சௌகவர்ணம், தானவர்ணம் ஸ்வரஜதி, இராகமாலிகை, பதம், ஜாவளி தில்லானா, ஸ்வர சாகித்யங்கள்". Pon̲n̲aiyā Kalaiyakam. Retrieved 2025-02-19.
  3. ""Preserve the house of Tanjore quartet"". The Hindu (in Indian English). 2010-05-25. Retrieved 2025-02-19.
  4. https://www.karnatik.com/co1375.shtml
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சை_நால்வர்&oldid=4211323" இலிருந்து மீள்விக்கப்பட்டது