பஞ்சோபசாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனிதன் வாழ்விற்கு அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐந்து வசதிகளை வழங்கிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டில் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஐந்து விதமான செயல்களைச் செய்கின்றனர். இது பஞ்சோபசாரம் எனப்படுகிறது. [1]

அவை

  1. சுவாமி சிலை அல்லது படத்துக்கு சந்தனமிடுதல்
  2. பூக்கள் கொண்டு பூசித்தல்
  3. தீபமேற்றிக் காட்டுதல்
  4. தூபம் போடுதல்
  5. நைவேத்தியம் (உணவு) படைத்தல்

-இவற்றில் சந்தனமிடுதல் நிலத்தையும் (பிருதிவி தத்துவம்) , பூக்கள் போட்டு அர்ச்சனை செய்வது ஆகாயத்தையும், தீபம் காட்டுதல் நெருப்பையும், தூபமிடுதல் வாயுவையும், உணவு படைத்தல் நீரையும் குறிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சோபசாரம்&oldid=1555373" இருந்து மீள்விக்கப்பட்டது