சை (திரைப்படம்)
சை | |
---|---|
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | பாரதி |
கதை | எம். ரத்தினம் (வசனம்) |
திரைக்கதை | இராஜமௌலி |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு | நித்தின் குமார் ரெட்டி ஜெனிலியா பிரதீப் ரவட் |
ஒளிப்பதிவு | கே. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் |
தயாரிப்பு | சிறீ பாரத் என்டர்பிரைசஸ் |
விநியோகம் | சிறீ பாரத் என்டர்பிரைசஸ் |
வெளியீடு | 23 செப்டம்பர் 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
தயாரிப்பு செலவு | ₹8 கோடி (US$1.05 மில்லியன்)(citation needed)[1] |
மொத்த வருமானம் | ₹12 கோடி (US$1.57 மில்லியன்)(share) |
சை(Sye) என்பது செப்டம்பர் 23,2004 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு அதிரடி விளையாட்டு திரைப்படம் ஆகும். இப்படத்தினை இராஜமௌலி இயக்கியுள்ளார். ஸ்டூடண்ட் நம்பர்.1 மற்றும் சிம்மாஹாத்ரி போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இதை இயக்கியுள்ளார். இப் படத்தின் கதை ரக்பி யூனியன் பின்னணியைக் கொண்டது. நித்தின் குமார் ரெட்டி மற்றும் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் இந்தியில் "ஆர் பார்: த ஜட்ஜ்மெண்ட் டே" (2012), தமிழில் "கழுகு", மற்றும் மலையாள மொழியில் "சாலஞ்ச்" என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.
கதை[தொகு]
பிரித்வி (நித்தின் குமார் ரெட்டி) மற்றும் சஷாங் ஹைதராபாத் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இவர்கள் இருவரும் இரு குழுக்களுக்கு தலைவர்களாக உள்ளனர். போராடும் குணம் கொண்ட இரு அணியினருக்கும் ரக்பி யூனியன் விளையாட்டு விருப்பமுடையதாக உள்ளது. தங்களுக்கிடையே நடக்கும் காரியங்களுக்கு ரக்பி விளையாடி வெற்றி பெறுவதின் மூலம் தங்களது மேலாண்மையை நிலைநாட்டுகின்றனர்.
ஒரு நாள், மாஃபியா தலைவரான பிக்ஷு யாதவ் (பிரதீப் ரவட்) கல்லூரியின் நிலத்தை கையகப்படுத்தி விட்டதாகக் குறிப்பிடும். நீதிமன்றத்தின் அரசாணைய அக் கல்லூரி மாணவர்களிடம் தெரிவிக்கிறான். இதை அறிந்த பிருத்வி மற்றும் ஷசாங்க் அணியினர் தங்களுக்கிடையே உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைகின்றனர். கல்லூரி நிலத்தை திரும்பப் பெற வேண்டி பிக்ஷு யாதவை தாக்குகின்றனர். மாணவர்களின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பிக்ஷு யாதவ் ஒரு சவால் விடுகிறான். ரக்பி விளையாட்டின் மூலம் தனது அணியைத் தோற்கடித்தால் கல்லூரி நிலத்தை திரும்பத் தருவதாகக் கூறுகிறான். பிருத்வி எவ்வாறு தனது அணியினரை ஒன்று சேர்த்து, தலைமை தாங்கி வெற்றி பெறுவது மீதிக் கதையாகிறது..[2]
நடிகர்கள்[தொகு]
- நித்தின் குமார் ரெட்டி - பிருத்வி
- ஜெனிலியா -இந்து
- சஷாங்
- பிரதீப் ரவட்
- நாசர்
- அஜய்
- ராஜீவ் கனகாலா
- தனிகில்லா பரணி
- வேணு மாதவ்
- சப்ரீத்
- சமீர் ஹசன்
- சிவநாராயணா நரிப்பிடி
- நார்சிங் யாதவ்
- எஸ். காஞ்சி
- சாய் சூர்யா
- ஆலாபதி லட்சுமி
- ப்ரீதி நிகம்
- சத்ரபதி சேகர்
- ஷிரவன்
- இராஜமௌலி சிறப்பு தோற்றம்
படக்குழு[தொகு]
- இயக்குநர்: இராஜமௌலி
- திரைக்கதை: எஸ். எஸ். இராஜமௌலி
- கதை: கே. வி. விஜயேந்திர பிரசாத்
- வசனம்: எம். ரத்னம்
- தயாரிப்பாளர்: ஏ. பாரதி
- இசை: கீரவாணி (இசையமைப்பாளர்)
- ஒளிப்பதிவு: கே. கே. செந்தில் குமார்.
- படத்தொகுப்பு: கோட்டகிரி வெங்கடேசுவர ராவ்
- கலை இயக்குநர்: ஆனந்த் சாய்
- ஆடைகலன் வடிவமைப்பாளர்: ரமா இராஜமௌலி
- சண்டை பயிற்சி: ராம் லக்ஷ்மண், விஜய்
இசை[தொகு]
இப் படத்திற்கு இசை அமைத்தவர் கீரவாணி (இசையமைப்பாளர்):
- "அப்புடுடப்புடு" - லக்கி அலி & சுமங்கலி - எழுதியவர் : எம். எம். கீரவாணி
- "சன்டைனா புஜ்ஜைனா" - கல்யாணி மாலிக், ஸ்மிதா, & வசுந்தரா தாஸ் - எழுதியவர் : சந்திரபோஸ்
- "கங்கா ஏ/சி" - கல்யாணி மாலிக், ஸ்மிதா, & வசுந்தரா தாஸ் - எழுதியவர் : சந்திரபோஸ்
- "குட்லொவுண்டி" - திப்பு & மாலதி - எழுதியவர் : புவன சந்திரா
- "நல்லா நல்லனி கள்ளா" - எம். எம். கீரவாணி, & சித்ரா - எழுதியவர் சிவ சக்தி தத்தா
- "பந்தம் பந்தம்" - தேவி ஸ்ரீ பிரசாத், எம். எம். கீரவாணி, திப்பு, சந்திரபோஸ், கல்யாணி மாலிக் & ஸ்மிதா - எழுதியவர் : சந்திரபோஸ்
வரவேற்பு[தொகு]
இத் திரைப்படம் ஒரு மையத்தில் 365 நாட்கள் ஓடி, வசூலில் சாதனை புரிந்தது. ₹12 கோடி
(US$1.57 மில்லியன்)[1] இது அத்கச் செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும்.₹8 கோடி
(US$1.05 மில்லியன்).[1]
இப் படத்தில் தோன்றும் 2015 ரக்பி உலகக்கிண்ணம் படக்காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.[3]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 http://www.idlebrain.com/movie/postmortem/chatrapati.html
- ↑ "Sye - Telugu Full Movie @ YouTube".
- ↑ Sion Morgan (2015-08-27). "Bollywood rugby blockbuster gives hilariously skewed version of world-famous sport". Mirror (UK). 2016-03-25 அன்று பார்க்கப்பட்டது.