சைட்டல்லா கோரிடா
சைட்டல்லா கோரிடா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | ரெட்டுவிடுடே
|
பேரினம்: | சைட்டல்லா
|
இனம்: | சை. கோரிடா
|
இருசொற் பெயரீடு | |
சைட்டல்லா கோரிடா இசுடால், 1865 | |
வேறு பெயர்கள் | |
பிளாடிமெரிசு கோரிடா இசுடால், 1865 |
சைட்டல்லா கோரிடா (Psytalla horrida) என்பது சைட்டல்லா பேரினத்தினைச் சார்ந்த கொலைகார பூச்சிகளுள் ஓர் சிற்றினமாகும். இது பொதுவாகக் கொடூர இராச கொலைகார பூச்சி அல்லது பெரும் முள் கொலைகாரப் பூச்சி என அழைக்கப்படுகிறது.[1] [2]
பரவல்
[தொகு]இச்சிற்றினம் வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்காவில் டோகோ முதல் கேமரூன் வரை காணப்படுகிறது .
விளக்கம்
[தொகு]சைட்டல்லா கோரிடாவின் உடல் நீளம் 3 முதல் 4.5 சென்டிமீட்டர் வரை உள்ளது.[3] உலகின் காணப்படும் கொலைகாரப் பூச்சிகளில் மிகப்பெரிது இதுவாகும். பெரிய தலை, குறிகிய கழுத்து, கடினமான கண்டங்களுடன் கூடிய வாயுறுப்புகளையுடையது. உணர்கொம்பு நீளமனது, மெல்லியது. கருமை நிற உடலினை கொண்டது. மார்புபகுதியில் கிரீடம் போன்ற இரு முட்கள் காணப்படுகின்றன. அடிவயிற்றின் விளிம்பில் சிவப்பு மற்றும் கருப்பு எச்சரிக்கை வண்ணங்களைக் கொண்டுள்ளன (லேட்டோடெர்கைட்டுகள்). கெமெலிட்ராவில் எனப்படும் முன் இறக்கையில் சிவப்பு வண்ண அடையாளங்கள் உள்ளன. கால்கள் நீளமாக உள்ளன. சிவப்பு மற்றும் கருப்பு தொடையும், முற்றிலும் சிவப்பு நிற கீழ்க்கால் உள்ளெலும்பு காணப்படும். இந்த இனத்தில் பால் ஈருமை வெளிப்படுகிறது. பெண் பூச்சியின் அடிவயிற்று மென்மையாகவும், ஆணில் அடிவயிற்றில் வட்ட புறவளர்ச்சி காணப்படும்.
உயிரியல் மற்றும் நடத்தை
[தொகு]இனச்சேர்க்கைக்குச் சில வாரங்களுக்குப் பிறகு பெண்கள் முட்டையிடுகின்றன. நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை அடைகாத்தல் நடைபெறும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகள் ஐந்து மில்லிமீட்டர் நீளமுடையன. இவற்றின் மார்பகமும் வயிற்றுப்பகுதியும் சிவப்பாகவும், கால்கள் மஞ்சளாகவும் உள்ளன. சில நாட்களில் மார்புப்பகுதி கருமை நிறமாக மாறும். இந்த வளர்ச்சியானது ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை நீடிக்கும். இளம் உயிரி ஆறு முறை தோலுரித்து முதிர்ந்த உயிரியாக மாறும். முதிர்ந்த உயிரி சராசரியாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை உயிர்வாழும். [3]
இவை பகலில் மரத்திலோ அல்லது இறந்த மரங்களிலோ மறைந்திருந்து, இரவில் வெளியே வரும்.[3] இரையை உண்பதற்காக, இப்பூச்சிகள் தங்களது கடுமையான தலைகூர்நீட்சி மூலம் இரையினுள் விசத்தினைச் செலுத்தி கொல்லுகின்றன. மேலும் இவை தீங்கு விளைவிக்கும் ஓர் வகையான திரவத்தைத் தெளிக்கலாம்.