சேரர் குடிப்பெயர்கள்
Appearance
கடுங்கோ, குடக்கோ (குடவர் கோமான்), குட்டுவன், கோதை, சேரல் (சேரன், சேரமான்), பொறை (பொறையன்) பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை, (பூழியன்) வானவன் என்பன சேர அரசர்களின் குடிப்பெயர்கள். இவற்றில் சில அவர்களின் ஆட்சி தொடங்கப்பட்ட நாட்டின் பெயரால் தோன்றியவை. பேரரசன் காலத்தில் இளவரசு பட்டம் கட்டி நாட்டின் ஒருபகுதியை ஆளும்படி செய்து, ஆளும்பயிற்சி தருவது அக்கால வழக்கம். இப்படி ஆண்ட குடநாட்டு அரசன் குடக்கோ. குட்டநாட்டு அரசன் குட்டுவன். பொறைநாட்டு அரசன் பொறையன்.
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் (பொள்ளாச்சி நாட்டில்) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.
பதிற்றுப்பத்துப் பதிகத்தில் காணப்படும் அரசர் பெயர்கள்
[தொகு]- உதியஞ்சேரல் [1] (மறைந்து போன பதிற்றுப்பத்து 1-ம் பத்தின் தலைவன் ?)
- நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் [1] பதிற்றுப்பத்து 2-ம் பத்து
- குட்டுவன், இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் [2] பதிற்றுப்பத்து 3-ம் பத்து
- சேரலாதன், ஆராத் திருவின் சேரலாதன் [3]
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [3] பதிற்றுப்பத்து 4-ம் பத்து
- நெடுஞ்சேரலாதன், குடவர் கோமான் [4]
- குட்டுவன், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் [4] பதிற்றுப்பத்து 5-ம் பத்து
- குட்டுவன் சேரல், செங்குட்டுவன் மகன் [4]
- நெடுஞ்சேரலாதன், குடக்கோ [5]
- சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் [5] பதிற்றுப்பத்து 6-ம் பத்து
- அந்துவன் [6]
- செல்வக் கடுங்கோ வாழியாதன் [7] பதிற்றுப்பத்து 7-ம் பத்து
- இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன் [8] பதிற்றுப்பத்து 8-ம் பத்து
- இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை [9]
- இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை [9] பதிற்றுப்பத்து 9-ம் பத்து
புறநானூற்று அடிக்குறிப்புத் தரும் அரசர் பெயர்கள்
[தொகு]- சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை [10]
- சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் [11]
- சேரமான் கடுங்கோ வாழியாதன் [12]
- சேரமான் கணைக்கால் இரும்பொறை [13]
- சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை [14]
- சேரமான் குட்டுவன் கோதை [15]
- சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை [16]
- சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் [17]
- சேரமான் கோக்கோதை மார்பன் [18]
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை [19]
- சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் [20]
- சேரமான் செலவக்கடுங்கோ வாழியாதன் [21]
- சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [22]
- சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ [23]
- சேரமான் பெருஞ்சேரலாதன் [24]
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் [25]
- சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [26]
- சேரமான் மாரி வெண்கோ [27]
- சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [28]
- சேரமான் வஞ்சன் [29]
- கோ ஆதன் செல்லிரும்பொறை <மகன்> பெருங்கடுங்கோ <மகன்> இளங்கடுங்கோ
- சேரன் செங்குட்டுவன்
- கடற்கடம்பு எறிந்த காவலன்[30]
- கடம்பு முதல் தடிந்த காவலன்[31]
- விடர்ச் சிலை பொறித்த வேந்தன்[30]
- பொருநைப் பொருநன்[30]
- மாந்தரஞ்சேரல் மன்னன்[30]
- சேரன் பொறையன் மலையன் ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்தவன்[31]
- வில் கயல் புலியான் யவனர் பிணித்தவன் [31]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ 1.0 1.1 பதிற்றுப்பத்து பதிகம் 2
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 3
- ↑ 3.0 3.1 பதிற்றுப்பத்து பதிகம் 4
- ↑ 4.0 4.1 4.2 பதிற்றுப்பத்து பதிகம் 5
- ↑ 5.0 5.1 பதிற்றுப்பத்து பதிகம் 6
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 7
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 7, 8
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 8
- ↑ 9.0 9.1 பதிற்றுப்பத்து பதிகம் 9
- ↑ புறநானூறு 13
- ↑ புறநானூறு 369
- ↑ புறநானூறு 8
- ↑ புறநானூறு 74
- ↑ புறநானூறு 5
- ↑ புறநானூறு 54
- ↑ புறநானூறு 210, 211
- ↑ புறநானூறு 62, 63, 368
- ↑ புறநானூறு 48, 49
- ↑ புறநானூறு 245
- ↑ புறநானூறு 387
- ↑ புறநானூறு 14
- ↑ புறநானூறு 50
- ↑ புறநானூறு 11
- ↑ புறநானூறு]] 65
- ↑ புறநானூறு 2
- ↑ புறநானூறு 52, 125
- ↑ புறநானூறு 367
- ↑ புறநானூறு 20
- ↑ புறநானூறு 398
- ↑ 30.0 30.1 30.2 30.3 காடுகாண் காதை அடி 81 முதல்
- ↑ 31.0 31.1 31.2 வாழ்த்துக் காதை