உள்ளடக்கத்துக்குச் செல்

பூழிநாடு (சேர நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூழியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூழியர் என்பவர் சங்ககால ஆயர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர்.

பூழியர் மேய்ச்சல் தொழிலை கொண்டிரு தனர் .[1]

அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர். [2]

பூழி என்னும் சொல் புழுதியைக் குறிக்கும்.[3]

பூழில் என்னும் சொல் கமழும் மணத்தைக் குறிக்கும் [4] இதனால் கொங்குநாடு என்பது மணம் மிக்க நாடு என்னும் பொருளைத் தரும்.

பூழிநாட்டுச் செருப்புமலைப் பாதையில் வயிரக்கற்கள் கிடைக்கும் [5]

பல்யானைச் செல்கெழு குட்டுவன், [6] களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [7] செல்வக் கடுங்கோ வாழியாதன் [8] பெருஞ்சேரல் இரும்பொறை [9], இளஞ்சேரல் இரும்பொறை [10] ஆகியோர் பூழிநாட்டைக் கைப்பற்றி ஆண்ட சேரமன்னர்கள் எனத் தெரியவருகின்றனர்.

பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
முத்தொள்ளாயிரம் என்னும் நூல் சேரமன்னனைப் பூழியன் என்றே குறிப்பிடுகிறது. [11]

பாண்டியன் நெடுமாறனை குறிக்க பாண்டிக்கோவை எனும் நூல் பூழியர் கோன் என சுட்டுகிறது [12]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பூழியர் துரு என்னும் செம்மறி ஆடுகள் மேய்த்தனர் - நற்றிணை 192
    பூழியர் வெள்ளாடு மேய்த்தனர் - குறுந்தொகை 163
  2. அகம் 6
  3. விசயம் கொழித்த பூழி - மலைபடுகடாம் 444
    விதையர் கொன்ற முதையல் பூழி - நற்றிணை 121
    வாரணம் முதைசுவல் கிளைத்த பூழி - நற்றிணை 389
    யானை … உதைத்த பூழி - அகம் 63
    எலி … முரம்பில் சிதைத்த பூழி - அகம் 133
    ஏர் இடம்படுத்த இறு மறுப் பூழி - அகம் 194
    பெயல் ஈரத்துப் பூழி மயங்க - புறம் 120
    கேழல் உழுத பூழி - புறம் 168
    பூழி பூத்த புழல்கால் ஆம்பி - சிறுபாணாற்றுப்படை 134
    உப்பு விற்போர் பூழிய சேண்புலம் சென்றனர் - அகம் 390
  4. பதிற்றுப்பத்து 87-2, ஐங்குறுநூறு 212
  5. கதிர்மணி பெறூஉம் - பதிற்றுப்பத்து 21-23
  6. பதிற்றுப்பத்து 21
  7. பதிற்றுப்பத்து பதிகம் 4
  8. புறம் 387-28
  9. பதிற்றுப்பத்து 73-13
  10. பதிற்றுப்பத்து 84, 90
  11. பூழியர்கோ – முத்தொள்ளாயிரம் 70, பூழியன் முத்தொள்ளாயிரம் 70
  12. [1]பாண்டிக் கோவை 116, 126
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூழிநாடு_(சேர_நாடு)&oldid=3035035" இலிருந்து மீள்விக்கப்பட்டது