குடவர் கோமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்
குடநாடு

சங்ககாலத்துச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு. அந்நாட்டு மக்கள் குடவர் (இடையர்) எனப்பட்டனர். இந்தக் குடநாட்டில் தன் ஆட்சியைத் தொடங்கிய சேர மன்னனைக் 'குடவர் கோ' என்றும், 'குடவர் கோமான் என்றும் குறிப்பிட்டனர். இவர்கள் குடநாட்டை வென்று ஆட்சியைத் தொடங்கியவர்கள் எனத் தெரியவருகிறது,

சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் 'குடவர் கோ' என்று குறிப்பிடப்படுகிறான். (குறுங்கோழியூர் கிழார் - புறநானூறு 17)

பதிற்றுப்பத்து ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் 'குடவர் கோவே' என்று அழைக்கிறார். (பதிற்றுப்பத்து 55)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 'குடவர் உட்கும் வான்தோய் வெல்கொடி குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்' என்று குறிப்பிடப்படுகிறான். (பதிற்றுப்பத்து பதிகம் 5)

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவர்_கோமான்&oldid=2564869" இருந்து மீள்விக்கப்பட்டது