உள்ளடக்கத்துக்குச் செல்

வானவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானவன் என்னும் சொல் சேர மன்னனைக் குறிக்கும்.

  1. கொல்லிமலையைத் தன் நாட்டோடு கொண்டிருந்த வானவன் [1] [2]
  2. ஆமூரைத் தாக்கி ஆமூரை ஆண்ட கொடுமுடி என்பவனிடம் தோற்றோடிய வானவன் [3]
  3. கோடியர் என்னும் யாழிசைப் பாணர்களைப் பேணிப் பாதுகாத்த குதிரைப்படைத் தலைவன் வானவன் [4]
  4. கோட்டைக் கொத்தளங்களை நொறுக்கிய வானவன் [5]
  5. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் தோற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகிய வானவன் [6]
  6. குடகடலில் பிற கப்பல்கள் செல்லாவண்ணம் தன் மரக்கலங்களை ஓட்டி வாணிகம் செய்த (கடல் பிறக்கு ஓட்டிய சங்குட்டுவனாகிய) வானவன் [7]

ஆகியோர் வானவன் என்னும் பெயரால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

வானவன் என்னும் சொல் இந்திரன் என்னும் தேவனைக் குறிக்கும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ள இலக்கிய வழக்குகளும் உண்டு. வானவன் முடித்தலை உடைத்த தென்னவன், [8] வானவன் விழவு இந்திர-விழா [9] வானவன் விழாக்கோள் [10] போன்றவை அவை.

மேலும் பார்க்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வெல்போர் வானவன் கொல்லி - அகம் 33
  2. வெல்போர் வானவன் கொல்லிக் குடவரை - அகம் 213
  3. வானவன் (படையை) நூறி, கொடுமுடி என்பவன் ஆமூரைக் காத்துவந்தான். - அகம் 159
  4. கோடியர் பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் திருந்துகழல் சேவடி நசைஇப் படர்ந்து ஆங்கு தலைவன் இருப்பிடம் செல்வோம் என்கிறாள் தலைவி ஒருத்தி - அகம் 309
  5. வானவன் உடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போல என் மேனி பெரும்பாழ் கொண்டுள்ளது - அகம் 381
  6. ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 39
  7. வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய ஞான்றை அவ்வழி பிறகலம் செல்லாது – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 126
  8. சிலப்பதிகாரம் 17-38-6
  9. (சிலப்பதிகாரம் 6-73)
  10. மணிமேகலை 25-197
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவன்&oldid=2565356" இலிருந்து மீள்விக்கப்பட்டது