வானவன் மறவன்
Appearance
வானவன் மறவன் என்னும் தொடர் சேரனின் படைத்தலைவனைக் குறிக்கும். பிட்டன் என்னும் தலைவன் வானவன் மறவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.
இவன் நறவு என்னும் ஊரினன். சிறந்த வில்வீரன். [1]
சிறந்த வாள் வீரனும் ஆவான். அத்துடன் சிறந்த கொடைவள்ளலாகவும் விளங்கினான். இவனது நாடு குதிரைமலைப் பகுதி. எனவே நறவு என்னும் ஊரும் குதிரைமலைப் பகுதியில் இருந்தது என்பது புலனாகிறது.[2]
மேலும் பார்க்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ வானவன் மறவன் வணங்குவில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் (இவனை எதிர்த்த பகைமன்னர்களின் வேல் துன்புற்றது போல இவன் கண்ணீர் நான் பிரியும்போது துன்பம் தருகிறது என்கிறான் தலைவன்) - அகம் 77
- ↑ வசையில் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ்சுனை (நீலம் போன்ற இவள் கண் அழுவது கண்டு நான் நோகிறேன் என்கிறான் தலைவன் - அகம் 143