சேரமான் வஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சேரமான் வஞ்சன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவன். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன்[1]. திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல்[2] ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.

புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. ....பறையிசை அருவிப் பாயல்கோவே! - (புறம் 398)
  2. புலியூர்க் கேசிகன், 2004. பக். 454, 455 (புறம் 398)

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரமான்_வஞ்சன்&oldid=2565107" இருந்து மீள்விக்கப்பட்டது