செல்லுலாய்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லுலாய்ட்
இயக்கம்கமல்
தயாரிப்பு
 • கமல்
 • உபைத்
கதைகமல்
மூலக்கதை
 • லைப் ஆப் ஜே. சி. டேனியல்சேலங்கட் கோபாலகிருஷ்ணன்
 • நஷ்ட நாயிகாவினு ஆபிரகாம்
இசைஎம். ஜெயசந்திரன்
நடிப்பு
ஒளிப்பதிவுவேணு
படத்தொகுப்புகே. ராஜகோபால்
கலையகம்பிரைம் டைம் சினிமா
விநியோகம்முரளி பிலிம்ஸ்
வெளியீடு15 பெப்ரவரி 2013 (2013-02-15)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
மொத்த வருவாய்50cro[1]

செல்லுலாய்ட் என்பது 2013 ஆண்டைய மலையாள வாழ்க்கை வரலாற்றுப் படமாகும், இப்படத்தை கமல் எழுதி இயக்கினார். இப்படத்தில் பிருத்விராஜ், சீனிவாசன், மம்தா மோகன்தாஸ் சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படமானது மலையாள திரைபடத்துறையின் தந்தை எனப்படும் ஜே. சி. டேனியலின் வாழ்க்கை கதை,[2] அவரது விகதகுமாரன் திரைப்படத்தை தயாரித்தல், விகதகுமாரன் படத்தின் கதாநாயகி பி. கே. ரோசியின் கதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இப்படமானது சேலங்கட் கோபாலகிருஷ்ணன் எழுதிய ஜே. சி. டேனியலின் வாழ்க்கை வரலாறான லைஃப் ஆஃப் ஜே. சி. டேனியலை அடிப்படையாகக் கொண்டது. 2012 நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் இணையதள சுவரொட்டிகள் 16 வயது சிறுவன் அஸ்வின் என்பவரால் செய்யப்பட்டது, இது சமூக ஊடகங்களில் வைரலாக ஆனது. படமானது 2013 பெப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்த படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான (பிருத்விராஜ்) விருது உட்பட ஏழு கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றது. முன்னணி திரைப்பட விழா ஆலோசகரான ஆல் லைட்ஸ் பிலிம் சர்வீசஸ் (ALFS),[3] ஆதரவுடன் இந்தத் திரைப்படம் ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

செல்லுலாய்ட் படமானது ஜே. சி. டேனியலின் ( பிருத்விராஜ் ) வாழ்கைக் கதையையும், சினிமா மீதான அவரது அன்பையும் சொல்கிறது. திரைப்படத்தைத் தயாரிக்கத் தேவையான உபகரணங்களைப் பெறுவதற்காக, ஏராளமான கடிதங்களை எழுதி, பல இடங்களைப் பார்வையிட்டு, சினிமாவை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவரான தாதாசாகெப் பால்கேவை ( நந்து மாதவ் ) சந்திப்பதற்கு இவர் மிகுதியான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இவரது படத்தில் நாயகி பாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது. படத்திற்கான கதையை ஜே. சி. டேனியலே உருவாக்குகிறார். ஜே. சி. டேனியலின் புரட்சிகர 'சலனப் பட' முயற்சியான விகதகுமாரன் படத்தின் கதையின் முக்கிய பாத்திரத்தை பி. கே. ரோசி (சாந்தினி) என மறுபெயரிடப்பட்ட ரோசம்மா நடிக்க முடிவாகிறது. டேனியல் தனது கனவை நனவாக்கவும், செலவுகளை சமாளிக்கவும் தனது சொத்துக்களை விற்கிறார். அது போதாமல் கடன் வாங்குகிறார். இறுதியாக விகதகுமாரன் படமானது 'சினிமாபுரா' என்ற கேபிடல் திரையரங்கில் திரையிடப்படுகிறது. அப்போது படத்தை பார்க்கவந்த உயர் சாதியினர் படத்தில் நாயர் பெண் கதாபாத்திரத்தில் நடித்த தாழ்த்தப்பட்ட யுவதியிடம் (ரோசி) முரட்டுத்தனம் காட்டுகின்றனர். உயர் சாதியினரால் வேட்டையாடப்பட்ட ரோஸி ஊரைவிட்டே தலைமறைவாகி சென்றுவிடுகிறார். பல ஆண்டுகள் கழிந்த நிலையில், வறுமையில் வாடும் டேனியலுக்கு, அவரது மனைவி ஜேனட் ( மம்தா மோகன்தாஸ்) மட்டுமே ஆறுதலாக அவருடன் இருந்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். யதேச்சையாக டேனியலைபற்றி அறியும் சேலங்கட் கோபாலகிருஷ்ணனின் ( சீனிவாசன் ) டேனியலை சந்தித்து அவரின் வாழ்க்கை குறித்து ஆர்வம் கொள்கிறார். அவருக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தர கோபால கிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் விகதகுமாரன் படத்தை உருவாக்கிய பிறகு டேனியலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்கான ஃப்ளாஷ்பேக்குகள்.. என படம் செல்கிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்க பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டார்.[4] ஜே. சி. டேனியலின் மனைவி ஜேனட் வேடத்தில் சம்விருதா சுனில் நடிக்க தேர்வு செய்யபட்டார், இது அவரது திருமணத்திற்கு முந்தைய கடைசி படமாக கருதப்பட்டது. ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக மம்தா மோகன்தாஸ் நடிக்க நியமிக்கபட்டடார்.[5] ரியாலிட்டி ஷோ ஜோஸ்கோ இந்தியன் வாய்ஸ் மூலம் புகழ் பெற்ற பாடகி சாந்தினி, மலையாள திரைப்படத்தின் முதல் கதாநாயகி பி. கே. ரோசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். தாதாசாகெப் பால்கேவின் கதாபாத்திரம் நடிகர் நந்து மாதவுக்கு வழங்கப்பட்டது, இவர் 2009 ஆம் ஆண்டய மராத்திய திரைப்படமான ஹரிச்சந்திரச்சி பேக்டரி (இது முதல் இந்திய திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை தயாரிக்க தாதாசாகிப் பால்கே நடத்திய போராட்டங்களைப் பற்றியது) [6] படத்தில் இதே பாத்திரத்தை ஏற்று நடிதிருந்தார். கேரளத்தில் டேனியலுக்கு அங்கிகாரத்தைப் பெற்றுத்தர அயராது உழைத்து பணியாற்றிய சேலங்கட் கோபாலகிருஷ்ணனின் பாத்திரத்தை ஸ்ரீனிவாசன் ஏற்றுக்கொண்டார்.[7] படத்திற்கான இணையதள சுவரொட்டிகளை 16 வயது சிறுவன் அஸ்வின் கே. எஸ். செய்தார்.

இப்படம் திருவனந்தபுரம் மற்றும் மைசூரில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் தமிழ் மொழிமாற்ற பதிப்பிற்கு ஜே. சி. டேனியல் என்று பெயரிடப்பட்டு 2013 ஆகத்தில் வெளியிடப்பட்டது.

விருதுகள்[தொகு]

படம் பின்வரும் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது:

சர்வதேச திரைப்பட விருதுகள்

 • இந்தோனேசியாவின் நகைச்சுவை காதல் மற்றும் இசை திரைப்பட விழாவுக்கான சர்வதேச திரைப்பட விழா - சிறந்த விருது

தேசிய திரைப்பட விருதுகள்

 • 2012 மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது

கேரள மாநில திரைப்பட விருதுகள்

 • 2012 சிறந்த படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது
 • 2012 சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது - பிருத்விராஜ்
 • 2012 சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருது - எம்.ஜெயச்சந்திரன்
 • 2012 சிறந்த பாடகருக்கான கேரள மாநில திரைப்பட விருது - சித்தாரா கிருஷ்ணகுமார் (பாடல்  : எனுண்டோடி அம்பிலிச்சந்தம்)
 • 2012 சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது - எஸ்.பி. சதீஷ்
 • 2012 சிறந்த கலை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருது - சுரேஷ் கொல்லம்
 • 2012 2012 கேரள மாநில திரைப்பட விருதுகள் சிறப்பு ஜூரி குறிப்பு - ஜி.ஸ்ரீராம், வைக்கம் விஜயலட்சுமி - 'காட்டே காட்டே நீ' பாடல்

மேற்கோள்கள்[தொகு]

 1. Malayalam Films of 2013
 2. "Kamal with a 'Celluloid'". IndiaGlitz. 27 April 2012. Archived from the original on 28 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. "'Go Global' with All Lights Film Services". indiantelevision.org.in. 18 December 2013.
 4. "I am working on a landmark film: Prithviraj". 13 September 2012 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024182249/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-13/news-and-interviews/33816001_1_malayalam-film-prithviraj-amal-neerad. பார்த்த நாள்: 19 October 2012. 
 5. "Mamta to replace Samvrutha for 'Celluloid'". IndiaGlitz. 22 August 2012. Archived from the original on 25 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. "Chandni makes Celluloid debut". Deccan Chronicle. 25 August 2012. Archived from the original on 26 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Flashback in tinsel town". 11 October 2012 இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021031350/http://www.thehindu.com/arts/cinema/flashback-in-tinsel-town/article3987337.ece. பார்த்த நாள்: 19 October 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]