உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. சி. டேனியல் (திரைத்துறை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. சி. டேனியல்
பிறப்பு1893-04-19
அகஸ்தீஸ்வரம்
இறப்பு1975-05-29
செயற்பாட்டுக்
காலம்
1926 - 1928
பின்பற்றுவோர்மலையாளத் திரைப்படத்துறை

ஜே. சி. டேனியல் மலையாள சினிமாவின் தந்தை[1] என்று போற்றப்படுபவர். இவரது விகதகுமாரன் (Vigathakumaran) (மலையாளம்: വിഗതകുമാരൻ எனும் மௌனத் திரைப்படமே மலையாளத்தில் வெளியான முதல் திரைப்படம்.

ஜே. சி. டேனியல் விகதகுமாரன் படத்தின் தயாரிப்பு, இயக்கம், கதை, படப்பிடிப்பு, தொகுப்பு என்ற அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டதோடன்றி கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

டேனியல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர். திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் படித்தவர். பழந்தமிழர் தற்காப்புக் கலையான களரிப்பயிற்றில் ஆர்வமும் பயிற்சியும் பெற்றிருந்த இவர் மக்களிடையே களரிப்பயிற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படம் ஒன்றை வெளியிட விரும்பினார். அன்றைய பம்பாய்க்குச் சென்று திரைப்பட நுட்பங்களைக் கற்றறிந்து விகதகுமாரன் படத்தை உருவாக்கினார்.[2]

பெண்கள் திரைப்படத்தில் நடிப்பது விபச்சாரத்திற்கு இணையான செயல் என்ற கருத்து நிலவிய அக்காலத்தில் ரோஸி என்ற தலித் பெண் விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடித்திருந்ததால் படமானது சாதி இந்துகளால் மிகுந்த எதிர்ப்புக்குள்ளானது. திரையரங்கத் திரை கிழிக்கப்பட்டது.[3] கூலித் தொழிலாளியான ரோஸியின் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. கடனாளியான டேனியல் தனது திரைப்படக் கருவிகளையெல்லாம் விற்க வேண்டியதாயிற்று.[2]

டேனியல் தனது எஞ்சிய வாழ்நாளை அகஸ்தீஸ்வரத்திலும் பாளையங்கோட்டையிலும் வறுமையில் கழித்தார். தமிழர் என்ற காரணம் காட்டி கேரள அரசு அவருக்கு உதவ மறுத்தது. 1975 ஆம் ஆண்டு டேனியல் காலமானார்.

1992 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு ஜே. சி. டேனியல் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cinema of Malayalam, J C Daniel, archived from the original on 6 ஜூன் 2009, பார்க்கப்பட்ட நாள் 1 january 2009 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. 2.0 2.1 cinemaofmalayalam.net - Biography பரணிடப்பட்டது 2009-06-06 at the வந்தவழி இயந்திரம்
  3. "New media misrepresents role of women: Kumar Shahani" பரணிடப்பட்டது 2010-08-18 at the வந்தவழி இயந்திரம். The Hindu. 2010-08-14.
  4. Weblokam - Profile: Page 2 பரணிடப்பட்டது 2008-10-29 at the வந்தவழி இயந்திரம்