செந்துறை கரும்பாயிரம் கோயில்
| அருள்மிகு கரும்பாயிரம் அய்யனார் திருக்கோயில் -உடையான்குடிக்காடு | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | கரும்பாயிரம் கொண்ட அய்யனார் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | அரியலூர் |
| அமைவிடம்: | செந்துறை, வட்டம்[1] |
| சட்டமன்றத் தொகுதி: | குன்னம் |
| மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | கரும்பாயிரம் அய்யனார் |
| குளம்: | தோப்பேரி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடி 28 கூட்டுறவு கிடா வெட்டு பூஜை, ஆடி மாதம் ஊரணி பொங்கல், அமாவாசை தோறும் சிறப்பு பூஜை, குலதெய்வ வழிபாட்டாளர்கள் குடும்ப காதணி விழா கிடா வெட்டு பூஜை |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கோயில்களின் எண்ணிக்கை: | 2 |
| வரலாறு | |
| கட்டிய நாள்: | 13 ஆம் நூற்றாண்டில் இருந்து வழிபாடுகள் நடந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
செந்துறை -உடையான்குடிக்காடு கரும்பாயிரம் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உடையான்குடிக்காடு என்னும் ஊரில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அழகு படையாட்சி எனும் பக்தர் ஒருவரால் தானமாக வழங்கப்பட்ட ஏறத்தாழ 7.36 ஏக்கர் பட்டா நிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1] இது 13ஆம் நூற்றாண்டில் இருந்து வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்த கோயிலின் காடுகள் பற்றி CBSE 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் கோயில் காடுகள் என்ற தலைப்பில் கரும்பாயிரம்கொண்டான் சாமி உடையான்குடிக்காடு என்ற படத்துடன் ஒரு பாடமாக இடம்பெற்று இந்திய மாணவச்செல்வங்கள் பயின்று வருகின்றனர்.
வரலாறு
[தொகு]இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.