உள்ளடக்கத்துக்குச் செல்

செசில் ரோட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைட் ஆனரபிள்
செசில் ரோட்சு
முனைவர், பொதுச்சட்டம்
ரோட்சு, c. 1900
7வது கேப் குடியேற்றத்தின் பிரதமர்
பதவியில்
17 சூலை 1890 – 12 சனவரி 1896
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
ஆளுநர்என்றி லோக்
வில்லியம் கேமரூன்
எர்குலெசு இராபின்சன்
முன்னையவர்ஜான் கார்டொன் இசுப்ரிகு
பின்னவர்ஜான் கார்டொன் இசுப்ரிகு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
செசில் ஜான் ரோட்சு

(1853-07-05)5 சூலை 1853
பிஷப்சு இசுடார்ட்போர்டு, எர்ட்போர்டுசையர், இங்கிலாந்து, ஐ.இரா
இறப்பு26 மார்ச்சு 1902(1902-03-26) (அகவை 48)
[மியூசென்பெர்கு, பிரித்தானிய கேப் குடியேற்றம்
(தற்போது தென்னாப்பிரிக்கா)
இளைப்பாறுமிடம்வேர்ல்ட்சு வியூ,
மட்டோப்போசு ஹில்சு, தெற்கு உரொடீசியா
(தற்போது சிம்பாப்வே)
20°25′S 28°28′E / 20.417°S 28.467°E / -20.417; 28.467
தேசியம்பிரித்தானியர்
உறவுகள்அருள்திரு பிரான்சிசு வில்லியம் ரோட்சு (தந்தை)
லூசியா பீகாக் ரோட்சு (தாய்)
பிரான்சிசு வில்லியம் ரோட்சு(உடன்பிறப்பு)
முன்னாள் கல்லூரிஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு
வேலைவணிகர்
அரசியல்வாதி

செசில் ஜான் ரோட்சு (Cecil John Rhodes) (5 சூலை 1853 – 26 மார்ச்சு 1902)[1] தென்னாப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலில் பெருவணிகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய பிரித்தானிய வணிகர். 1890இலிருந்து 1896 வரை கேப் குடியேற்றத்தின் பிரதமராகவும் பணியாற்றியவர். பிரித்தானியப் பேரரசுவாதத்தில் மிகுந்த பற்றுடைய ரோட்சு தமது பிரித்தானிய தென்னாப்பிரிக்க கம்பனி மூலம் உரோடீசியா பகுதியை (தற்போதைய சிம்பாப்வேயும் சாம்பியாவும்) உருவாக்கினார்; 1895இல் இவரது பெயரையே கம்பனி இப்பகுதிக்குச் சூட்டியது. தென்னாப்பிரிக்காவின் ரோட்சு பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவரது சொத்துக்களின் வருமானத்தைக் கொண்டு ரோட்சு படிப்புதவி நிறுவப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆட்சிப்பகுதிகள் வழியாகவே கேப்பிலிருந்து கெய்ரோ வரை தொடருந்து அமைப்பு நிறுவுவதை தமது கனவாகக் கொண்டு பெரிதும் முயற்சிகள் எடுத்தார்.

பங்கு பாதிரியாரின் மகனாகப் பிறந்த ரோட்சு இளமையில் மிகவும் உடல்நலம் குன்றியவராக இருந்தார். அவருக்குப் பதினேழு அகவைகள் நிறைந்தபோது தென்னாப்பிரிக்காவிற்கு அவர் அனுப்பப்பட்டார்; தென்னாப்பிரிக்காவின் வானியல் சூழல் அவரது உடல்நலத்தை மேம்படுத்தும் என அவரது குடும்பத்தினர் கருதினர். 1871ஆம் ஆண்டில், தமது 18ஆம் அகவையில், கிம்பர்லியில் வைர வணிகத்தில் ஈடுபட்டார். அடுத்த இருபதாண்டுகளில் உலகின் வைர வணிகத்தில் கிட்டத்தட்ட முற்றுரிமைநிலை எட்டினார். 1888இல் நிறுவப்பட்ட இவரது தே பீர்ஸ் வைர நிறுவனம் 21ஆம் நூற்றாண்டிலும் தனது வல்லாண்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ரோட்சு 1880இல் நன்னம்பிக்கை முனை நாடாளுமன்றத்தில் கால் பதித்தார்; அடுத்த பத்தாண்டுகளில் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1890களின் துவக்கத்தில் உரோடீசியா உருவாவதை மேற்பார்வையிட்ட வந்த ரோட்சு, 1896இல் டிரான்சுவாலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பதவி விலக நேரிட்டது. தமது 48ஆம் அகவையில், 1902ஆம் ஆண்டில் உயிரிழந்த ரோட்சு தற்போதைய சிம்பாப்வேயிலுள்ள மட்டோப்போசு ஹில்சில் புதைக்கப்பட்டார்.

ரோட்சின் அரசியலிலும் வணிக முயற்சிகளிலும் ஆங்கிலோ-சாக்சன் இனத்தினரே சாதனை படைக்கப் பிறந்தவர்கள் என்ற மனச்சார்பு எதிரொலித்தது; அவரது உயில் கூட "உலகின் முதல் இனத்தினர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] மேலும் "உலகின் பெரும்பகுதியை நாம் கையகப்படுத்தினால் மனித குலத்திற்கு அது நன்மை பயக்கும்" [2] என்று நம்பிய ரோட்சு தீவிரமாக குடியேற்றவாதத்தை ஆதரித்தார். பிரித்தானியப் பேரரசின் ஒவ்வொரு அங்கமும் தன்னாட்சி பெற்று இலண்டனில் அமைந்த ஒற்றை நாடாளுமன்றத்தால் ஆளப்படும் கனவை முன்வைத்தார். கறுப்பினத்தவரை காட்டுமிராண்டிகளாக சித்தரித்த ரோட்சு அவர்களை அரசியலில் ஓரங்கட்டும் முயற்சிகளின் மையமாக விளங்கினார். இதனால் தற்கால விமரிசகர்கள் இவரை வெள்ளையின ஆதிக்கவாதியாக வகைப்படுத்துகின்றனர்.

நினைவகங்கள்

[தொகு]
கேப் டவுனில் உள்ள டெவில்சு பீக்கில் உள்ள ரோட்சு சிலை.
கிம்பர்லியில் ரோட்சு சிலை

கேப் டவுனில் ரோட்சுக்கு மிகவும் விருப்பமான டெவில் பீக் சரிவுகளில் அவருக்கான நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது; இங்கிருந்து கேப்பிலிருந்து கெய்ரோ செல்லும் பெரும் வடக்குச் சாலையை வடக்கிலும் கிழக்கிலும் காணலாம். 1910 முதல் 1984 வரை கேப் டவுனில் இருந்த ரோட்சின் இல்லம்தான் தென்னாப்பிரிக்க பிரதமர்களின் அலுவல்முறை இல்லமாக இருந்தது;தொடர்ந்து பி.டபிள்யூ.போத்தா, மற்றும் எஃப்.டபுள்யூ டெ கிளர்க் காலத்தில் குடியரசுத் தலைவரின் இல்லமாக இருந்தது.

ரோட்சு பிறந்தவிடம் 1938இல் நினைவு அருங்காட்சியகமாக நிறுவப்பட்டது; தற்போது இது பிஷப்சு இசுடார்ட்போர்டு அருங்காட்சியகம் என அறியப்படுகின்றது. அவர் இறந்த இல்லமும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இவரது அறங்காவலர்களால் இவரது பெயரில் ரோட்சு பல்கலைக்கழகக் கல்லூரி, தற்போது ரோட்சு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது மே 31, 1904இல் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

கிம்பர்லி நகரமன்றத்தினர் 1907இல் தங்கள் நகரில் அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்பினர்.[3]

எதிர்ப்பு

[தொகு]

1950களிலிருந்து ரோட்சுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களுக்கு எதிராக சில ஆப்ரிகானர் மாணவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகின்றனர். கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோட்சு சிலை நீக்கப்பட வேண்டும் எனப் போராடினர்.[4] "ரோட்சு விழ வேண்டும்" (அல்லது #ரோட்சுமஸ்ட்ஃபால்) என அறியப்படும் இயக்கம் கேப் டவுன் பல்கலைகழகத்தில் மாணவர் எதிர்ப்புகளுடன் துவங்கியது; இதையொட்டி பல்கலைக்கழக நிர்வாகம் இச்சிலையை நீக்கினர்.[5] இந்தப் போராட்டம் இனவொதுக்கலுக்குப் பிறகான தென்னாப்பிரிக்காவில் கல்விநிறுவனங்களில் அமைப்புச் சார்ந்த மாற்றங்கள் நடைபெறாதிருப்பதை எடுத்துக் காட்டியது.[6]

கேப் டவுன் பல்கலைக்கழக வெற்றிக்குப் பின்னர் இதே போன்ற இயக்கங்கள் தென்னாப்பிரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பரவியது. ரோட்சு பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதும் இவற்றில் ஒன்றாகும்.[7] ஆக்சுபோர்டின் ஓரியல் கல்லூரியிலுள்ள சிலையை நீக்கவும் போராடி வருகின்றனர்.[8]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. The Times 27 மார்ச்சு 1902.
  2. 2.0 2.1 Rhodes 1902.
  3. Maylam 2005, ப. 56.
  4. Masondo, Sipho (22 March 2015). "Rhodes: As divisive in death as in life". News24. Archived from the original on 6 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Op-Ed: Rhodes statue removed from uct". The Rand Daily Mail. Johannesburg: Times Media Group. 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 10 April 2015.
  6. Grootes, Stephen (6 April 2015). "Op-Ed: Say it aloud - Rhodes must fall". Daily Maverick. பார்க்கப்பட்ட நாள் 7 April 2015.
  7. Ispas, Mara. "Rhodes Uni Council approves plans for name change". SA Breaking News. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.
  8. Hind, Hassan (12 July 2015). "Oxford Students Want 'Racist' Statue Removed". Sky News. http://news.sky.com/story/1517577/oxford-students-want-racist-statue-removed. பார்த்த நாள்: 13 July 2015. 

உசாத்துணை

[தொகு]

தனிவரைநூல்கள்

[தொகு]

கலைக்களஞ்சியங்கள்

[தொகு]

ஆய்விதழ் கட்டுரைகள்

[தொகு]

செய்தித்தாள் கட்டுரைகள்

[தொகு]

வலைத்தளங்கள்

[தொகு]

நூற்கோவை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செசில்_ரோட்சு&oldid=3858223" இலிருந்து மீள்விக்கப்பட்டது