உள்ளடக்கத்துக்குச் செல்

தே பீர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தே பீர்ஸ் குழும நிறுவனங்கள்
வகைதனியார்
வகைவணிகம்
நிறுவுகை1888
நிறுவனர்(கள்)செசில் ரோட்சு
தலைமையகம்லக்சம்பர்கு, லக்சம்பர்க்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்மார்க் குட்டிபெனி (தலைவர்)
பிலிப் மெல்லியர் (த.செ.அ)
தொழில்துறைவைர அகழ்வெடுப்பும் வணிகமும்
உற்பத்திகள்வைரங்கள்
சேவைகள்வைர வியாபாரம். விற்பனை மேம்படுத்தலும் சந்தையாக்கலும். சமூக மேம்பாடு.
வருமானம்$17.1 பில்லியன் (FY 2014)[1]
பணியாளர்200,000+
இணையத்தளம்debeersgroup.com

தே பீர்ஸ் குழும நிறுவனங்கள் (The De Beers Group of Companies) வைரம் மற்றும் வைரம் தயாரிப்பு, வைரச் சுரங்கங்களைத் தேடுதல், அகழ்ந்தெடுத்தல், வைரச் சில்லறை வணிகம் போன்ற வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமம் ஆகும். இக்குழுமம் தற்போது வைரம் அகழ்ந்தெடுப்பதில் உள்ள அனைத்து வகைகளில் செயற்பாட்டில் உள்ளது: திறந்த-குழி, புவிகீழ், பெருமளவில் மணற்பாங்கு, கடலோர மற்றும் ஆழ்கடல் சுரங்கங்கள்.[2] இந்நிறுவனம் 28 நாடுகளில் இயக்கத்தில் உள்ளது; இதன் சுரங்கங்கள் போட்சுவானா, நமிபியா, தென்னாப்பிரிக்கா, கனடாவில் உள்ளன. தற்போது தே பீர்ஸ் உலகின் வைரத் தயாரிப்பில் ஏறத்தாழ 35% விற்கிறது.[3]

இந்த நிறுவனத்தை 1888இல் பிரித்தானிய வணிகர் செசில் ரோட்சு நிறுவினார்; இதற்கு இலண்டனில் உள்ள என் எம் ரோத்சைல்ட்சு & சன்சு வங்கியும் ஆல்பிரெடு பெய்ட் என்ற தென்னாப்பிரிக்க வைர வியாபாரியும் முதலீடு ஆதரவளித்தனர்.[4] செருமனியிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று, அமெரிக்க நிதிய முதலீட்டாளர் ஜே. பி.மோர்கனின் உதவியுடன் ஆங்கிலோ அமெரிக்க நிறுவனம் என்ற சுரங்கத்தொழில் பெருநிறுவனத்தை நிறுவியிருந்த[5] எர்னசுட்டு ஓப்பனெய்மர் 1926இல் தே பீர்சு இயக்குநர் வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இவர் உலகளவில் நிறுவனத்தை விரிவுபடுத்தி வைரத் தொழில் இதன் முற்றுரிமையை நிலைநாட்டினார். 1957இல் தமது மரணம் வரை இந்நிறுவனத்தை நடத்திச் சென்றார். இவரது செயற்காலத்தில் நிறுவனத்தின்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன: விலை நிர்ணய ஊழல், போட்டியுடைத்தல் நடத்தை, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க போர் முயற்சிகளுக்கு தொழில்இரக வைரங்களை வெளியிடாதது போன்றவை.[7][8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. De Beers Group:Results for the year ended 31 December 2013 பரணிடப்பட்டது 2013-05-22 at the வந்தவழி இயந்திரம், February 2013, Retrieved: 15 February 2013.
  2. "Mining". De Beers Group. Archived from the original on 28 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
  3. Zimnisky, Paul (August 18, 2014). "The Separation of Power (or lack thereof?) in the Rough Diamond Industry". Kitco Commentary. Kitco.
  4. Epstein, Edward Jay (1982). The rise and fall of diamonds: the shattering of a brilliant illusion. Simon and Schuster. பார்க்கப்பட்ட நாள் 29 June 2012.
  5. "New Mining Target: Anglo American". Forbes. 21 August 2006. http://www.forbes.com/2006/08/21/anglo-american-update-cx_cn_0821miner.html. 
  6. Chilvers, Henry (1939). The Story of De Beers. Cassell. p. 227. {{cite book}}: |access-date= requires |url= (help)
  7. Janine P. Roberts (2003). Glitter & Greed. The Disinformation Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9713942-9-6. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008.
  8. Theodor Emanuel Gregory (1977). Ernest Oppenheimer and the Economic Development of Southern Africa. Arno Press. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தே பீர்ஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தே_பீர்ஸ்&oldid=3582917" இலிருந்து மீள்விக்கப்பட்டது