செகந்திராபாது சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செகந்திராபாது
Secunderabad
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,39,601
சட்டமன்ற உறுப்பினர்
2nd Telangana Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
டி. பத்மா ராவ் கவுடு
கட்சிபாரத் இராட்டிர சமிதி

செகந்திராபாது சட்டமன்றத் தொகுதி (Secunderabad Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது செகந்திராபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

தெலங்காணா மாநிலத்தின் தற்போதைய துணைச் சபாநாயகர் டி. பத்மா ராவ் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

தொகுதியின் பரப்பளவு[தொகு]

சட்டமன்றத் தொகுதியில் தற்போது ஐந்து நகராட்சிப் பிரிவுகள் மற்றும் பின்வரும் சுற்றுப்புறங்கள் உள்ளன:

பகுதிகள்
அடகுட்டா
பௌத்தநகர்
மேட்டுகுடா
சீதாபல்மண்டி
உசுமானியா பல்கலைக்கழகம்
தர்னாகா
சிலகல்குடா
நாமலகுண்டு
துக்காராம்கேட்
வாரசிகுடா
பார்சிகுட்டா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 வி. பி. ராஜு இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. சத்திய நாராயணா
1962
1967
1972 எல். நாராயணா
1978 ஜனதா கட்சி
1983 எம். கிருஷ்ணா ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1985 ஆலடி ராஜ் குமார்
1989 மேரி ரவீந்திர நாத் இந்திய தேசிய காங்கிரசு
1994 தலசனி சீனிவாச யாதவ் தெலுங்கு தேசம் கட்சி
1999
2004 டி.பத்மா ராவ் பாரத் இராட்டிர சமிதி
2008 தலசனி சீனிவாச யாதவ் தெலுங்கு தேசம் கட்சி
2009 ஜெயசுதா கபூர் இந்திய தேசிய காங்கிரசு
2014 டி.பத்மா ராவ் பாரத் இராட்டிர சமிதி
2018

நிகழ்வுகள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]