சுவீடனில் இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவீடனில் இந்தியர்கள்
Indians in Sweden
மொத்த மக்கள்தொகை
47,369 (2021; பிறப்பு வழி)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இசுடாக்கோம் · உலுந்து · மால்மோ · எல்சிங்போர்க்கு · கோதென்பெர்க்கு · கார்லசுகுரோனா · வாசுடெராசு
மொழி(கள்)
தமிழ் · இந்திய மொழிகள் · சுவீடிய மொழி · ஆங்கிலம்
சமயங்கள்
இந்து சமயம் · சீக்கியம் · கிறிஸ்தவம் (கத்தோலிக்க திருச்சபை · லூதரனியம்· சைனம் · இசுலாம் (சன்னி· இந்தியாவில் சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்

சுவீடனில் இந்தியர்கள் (Indians in Sweden) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்களையும் சுவீடனில் வசிப்பவர்களையும் குறிக்கிறது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 7,870 இந்திய மாணவர்கள் சுவீடனில் மேற்படிப்புக்காக வந்தனர். சுவீடன் நாட்டு 2016 ஆம் ஆண்டு புள்ளிவிவர நிலவரப்படி, சுவீடனில் மொத்தம் 25,719 இந்தியாவில் பிறந்த புலம்பெயர்ந்தோர் வாழ்ந்தனர். [1] இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபியர்கள், வங்காளிகள் மற்றும் தென்னிந்தியர்கள் . சில இந்தியர்கள் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்களாவர். 1970 ஆம் ஆண்டுகளில் உகாண்டாவிலிருந்து சில இந்தியர்கள் சுவீடனுக்கு வந்துள்ளனர்.

சுவீடனின் பன்னாட்டு தத்தெடுப்புகளுக்கு உரிய மிகவும் பொதுவான நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் பிறந்த 0-21 வயதிலுள்ள 1,017 குழந்தைகள் சுவீடனில் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். [2]

தொழிலாளர் பொருளாதார நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, சுவீடனில் வசிக்கும் இந்தியாவில் பிறந்த புலம்பெயர்ந்தோர் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் தோராயமாக 54% ஆக இருந்தது. அவர்களின் வேலைவாய்ப்பு மக்கள் தொகை விகிதம் சுமார் 49% ஆகவும் வேலையின்மை விகிதம் சுமார் 6% ஆகவும் அப்போது இருந்தது. [3]

புள்ளிவிவரப்படி, சுவீடனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களில் சுமார் 50% பேர் இசுடாக்கோம் மாகாணத்தில் வாழ்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களாகப் பணிபுரிகின்றனர். [4] இசுகேன் மாகாணத்தில், 2020 ஆம் ஆண்டில் டென்மார்க்கு நாட்டு இனக் குழுவினரான தேன்சு இனத்துடன் சேர்ந்து குடியேறியவர்களின் மிகப்பெரிய குழுக்களில் இந்தியர்களும் அடங்குவர். இசுகேன் மாகாணத்திலுள்ள எல்சிங்போர்க்கு, உலுந்து மற்றும் மால்மோ ஆகிய மூன்று முக்கிய நகரங்களில், வாழும் புலம்பெயர்ந்த மக்களில் முறையே முதல், இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்தை இந்திய புலம்பெயர்ந்தோர் பெற்றுள்ளனர். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Foreign-born persons by country of birth, age, sex and year". Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.
  2. "Adopted children and young persons, number by sex, age, country of birth and year". Statistics Sweden. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
  3. "Mapping Diasporas in the European Union and the United States - Comparative analysis and recommendations for engagement" (PDF). Institute of Labor Economics. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017. - cf. Appendix 4: Diaspora characteristics - labour force indicators by sending countries
  4. "It-jobben har gjort indier till största invandrargruppen i Stockholm". https://sverigesradio.se/artikel/it-jobben-har-gjort-indier-till-storsta-invandrargruppen-i-stockholm. 
  5. "It-jobben har gjort indier till en av Skånes största invandrargrupper". Sydsvenskan. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவீடனில்_இந்தியர்கள்&oldid=3731693" இலிருந்து மீள்விக்கப்பட்டது