சுரேஷ் சக்கரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் சக்ரவர்த்தி
பிறப்பு சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டப்பெயர்(கள்) தாத்தா
தொழில்
துணைவர் ஸ்ரீகலா சுரேஷ்
பிள்ளைகள் 1

கே. ஜே. சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு இந்திய இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் உணவக உரிமையாளர் ஆவார். பிக் பாஸ் தமிழ் என்ற ரியாலிட்டி ஷோவின் நான்காவது பகுதியில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறியப்பட்டார்.[1] இவர், சாக்ஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனலையும் இயக்குகிறார்.[2][3]


வாழ்க்கை[தொகு]

அவர் 9 வயதில் தனது தந்தையையும், 20 வயதில் தனது தாயையும் இழந்தார். சென்னை செயின்ட் பேடேஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் ஏ. வி. எம் ஸ்டுடியோவில் கட்டுப்பாட்டாளராக நியமனம் செய்யப்பட்டர்.[4]நடிகை அமலா அக்கினேனி மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோருக்கு இவர் மேலாளராகவும் பணியாற்றினார். பின் இவர் சன் தொலைக்காட்சியின் மூத்த மேலாளராகப் பணி நியமனம் செய்யப்படார்.[5] அவரது மகனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன் தொழிலில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றார்.[6]. பின்பு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மீண்டும் தனது மனைவியுடன் சென்னையில் குடியேறினார்.

சினிமா[தொகு]

சுரேஷ் 1989 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான பிரேமா திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது தமிழ் அறிமுகம் 1991 இல் அழகனில் இருந்தது.[7]சிவா உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களுக்கு இவர் உரையாடல் எழுதினார். பெப்சி உங்கள் சாய்ஸ் உட்பட பல வெற்றி நிகழ்ச்சிகளையும் சன் தொலைக்காட்சியில் இயக்கினார்.[8] அவர் எனக்குள் ஒருத்தி என்னும் சீரியலில் ஒரு பெண் பாத்திரத்தில் நடித்தார்.[9]ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபின், கமல்ஹாசனால் நள தமயந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.[10] 2020 ஆம் ஆண்டில், பிக் பாஸ் தமிழில் நான்காவது சீசனில் பங்கேற்றார்.[11]

திரைப்படவியல்[தொகு]

தமிழ்[தொகு]

சாந்தி முகூர்த்தம் (1984)

நாம் இருவர் (1985)

• மைதிலி என்னை காதலி (1986)

பேசும் படம் (1987)

• சிவா (தெலுங்கு திரைப்படத்தின் டப்பிங் பதிப்பிற்கான 1989 உரையாடல் எழுத்தாளர்)

அழகன் (1991)

• வண்ண வண்ண பூக்கள் (1992)

மறுபடியும் (1993)

• என் இனிய பொன் நிலவே (2001)

நள தமயந்தி (2003)

தமிழில் வரவிருக்கும் திரைப்படங்கள்[தொகு]

• துப்பறிவாளன் 2

தெலுங்கு[தொகு]

• நாகு (1984)

பிரேமா (1989)

• சிவா (1991 இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவி)

தொலைக்காட்சி[தொகு]

இயக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

• நீங்கள் கேட்ட பாடல்கள்

• நம்ம நேரம்

•போட்டா போட்டி

• ஜோடி பொருத்தம்

• சப்தஸ்வரங்கள்

• வணக்கம் தமிழகம்

• பெப்சி உங்கல் சாய்ஸ்

• மீண்டும் மீண்டும் சிரிப்பு

• மிட்நைட் மசாலா

• பாட்டுக்கு பாட்டு

• எனக்குள் ஒருத்தி

சின்னா பாப்பா பெரிய பாப்பா

• டிக் டிக் டிக்

சித்தி 2

• தரி


வெளி இணைப்புகள்[தொகு]

https://m.imdb.com/name/nm12177286/

https://www.imdb.com/title/tt13512588/characters/nm11512488

https://m.imdb.com/name/nm11512488/

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சக்கரவர்த்தி&oldid=3357348" இருந்து மீள்விக்கப்பட்டது