சுரேந்திர பால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திர பால் சிங்
Surendra Pal Singh
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962–1977
முன்னையவர்இரகுபர் தயாள் மிசுரா மற்றும் கே.எல். பால்மீகி
பின்னவர்மகமூத் அசன் கான்
பதவியில்
1984–1989
முன்னையவர்மகமூத் அசன் கான்
பின்னவர்சர்வார் உசேன்
தொகுதிபுலந்த்சகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-05-17)17 மே 1917
பகன்பூர், புலந்தசகர் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு10 திசம்பர் 2009(2009-12-10) (அகவை 92)
புலந்த்சாகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சுரேந்திர பால் சிங் (Surendra Pal Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு விவசாயவாதியான இவர் மத்திய அரசாங்க அமைச்சராக இருந்தார். [1] கர்னல் பிரவுன் கேம்பிரிட்ச்சு பள்ளி மற்றும் கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.

கோட்டை, உச்சகான்[தொகு]

1927 ஆம் ஆண்டில், தனது 10-ஆவது வயதில், உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகரில் உள்ள உஞ்சகானில் உள்ள கோட்டையை அவர் பெற்றார். [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சுரேந்திர பால் சிங் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். புலந்த்சாகரில் இருந்து 4 ஆவது, 5 ஆவது மற்றும் 8ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

இறப்பு[தொகு]

தனது 92-ஆவது வயதில் 2009 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று புலந்த்சாகரில் சுரேந்திர பால் சிங் இறந்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Lok Sabha Debates (Third Session, Fifteenth Lok Sabha)". Lok Sabha Debates 3 (34): 9–10. 18 December 2009. https://eparlib.nic.in/bitstream/123456789/758405/1/1812_III.pdf. பார்த்த நாள்: 1 October 2022. 
  2. "The Fort Unchagaon". பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
  3. "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திர_பால்_சிங்&oldid=3810823" இலிருந்து மீள்விக்கப்பட்டது